Category:
Created:
Updated:
பிரபல திரைப்பட துணை நடிகர் மாறன் கொரோணா பாதிப்பால் உயிர் இழந்தார். செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்த அவர், கொரோனா பாதிப்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் கில்லி மற்றும் வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். சார்பட்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவரது மறைவிற்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.