Ads
மனதில் நினைப்பதை வார்த்தைகளாக அறிய முடியும் - வருகிறது புதிய அம்சம்
மனித மூளையின் குறிப்பிட்ட பகுதியில் மிகச்சிறிய கருவியை பொருத்துவதன் மூலம் மனதில் நினைப்பதை, விரும்பிய மொழியில் வார்த்தைகளாக அறிய முடியும் என அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கால்டெக் என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த கருவி, பேச்சு மற்றும் கேட்புத் திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி 2 பேரின் மூளையில் இக்கருவி பொருத்தப்பட்டு சோதித்ததில் அவர்கள் நினைத்ததை 79 சதவிகித துல்லியத்தில் வார்த்தையாக எட்ட முடிந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அதுமடுமல்லாது மூளையின் சிக்னல்களைப் பெற்று அதை உடனுக்குடன் மொழியாகவும் வார்த்தையாகவும் இக்கருவி மாற்றுவதாகவும் கூறியுள்ளனர்
Info
Ads
Latest News
Ads