சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  8 news
  •  ·  6 friends
  • R

    8 followers

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல், நீதித்துறை மீது விழுந்த பேரிடி...!!!

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா அவர்கள், தன்மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக, தனது பதவியையும், பொறுப்புகளையும் துறந்துள்ளமை, இந்த நாட்டின் நீதித்துறையினது சுயாதீன இயங்குநிலையை அடியோடு ஆட்டம் காணச் செய்துள்ளது. 
நீதிபதி சரவணராஜா அவர்கள் கடந்த 2023.07.04 ஆம் திகதி தனது கடமை நிமித்தம் குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவித்த கருத்துகளை மேற்கோள்காட்டி 2023.07.07 ஆம் திகதிய நாடாளுமன்ற உரையிலும், அதன்பின்னர் பொதுவெளியிலும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை, நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அவதூறுக்கு உள்ளாக்கியிருந்தார். 
அதன்பின்னர் குருந்தூர்மலையில் தமிழர்கள் வழிபாடியற்றுவதற்கு, சட்டவரன்முறைகளுக்கு உட்பட்டு நியாயபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் மட்டத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகியுள்ளமை இந்த நாட்டின் நீதித்துறைக்கும், ஜனநாயகத்துக்கும் விழுந்திருக்கிற சாட்டையடி மட்டுமல்ல, இதை மிகமோசமான இனவாதச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. 
2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக இருந்த திருமதி.சிறீநிதி நந்தசேகரன் அவர்கள் மீது, இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சியை அடியொற்றி, மீளவும் வடக்கின் தமிழ் நீதிபதி ஒருவர்மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகையதொரு உயிர் அச்சுறுத்தல், இலங்கையின் நீதித்துறையின் இயங்குநிலையும் மெல்லமெல்ல இராணுவமயப்படுத்தப்படுவதற்கான எத்தனமாகவே தென்படுகிறது. 
நீதித்துறையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இந்த நாட்டில், இன, மத ஆக்கிரமிப்புகளும், அடக்குமுறைகளும் எத்தனை வீரியமாய் இருக்கும் என்பது பற்றி, சர்வதேச சமூகம் இனியேனும் கூருணர்வோடு செயலாற்ற வேண்டும் என்றும், இத்தகையதொரு நிலை, இன்னுமோர் தமிழ் நீதிபதிக்கு
ஏற்படாதிருக்க வழிவகை செய்யவேண்டும்
===================================
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் அறிக்கையில் இருந்து பிரதி செய்யப்பட்டது பிரதியாக்க முழுமை பின்வருமாறு 
 முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல், நீதித்துறைக்கு விழுந்த சம்மட்டியடி...!!! 
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா அவர்கள், தன்மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக, தனது பதவியையும், பொறுப்புகளையும் துறந்துள்ளமை, இந்த நாட்டின் நீதித்துறையினது சுயாதீன இயங்குநிலையை அடியோடு ஆட்டம் காணச் செய்துள்ளது. 
நீதிபதி சரவணராஜா அவர்கள் கடந்த 2023.07.04 ஆம் திகதி தனது கடமை நிமித்தம் குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவித்த கருத்துகளை மேற்கோள்காட்டி 2023.07.07 ஆம் திகதிய நாடாளுமன்ற உரையிலும், அதன்பின்னர் பொதுவெளியிலும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை, நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அவதூறுக்கு உள்ளாக்கியிருந்தார். 
அதன்பின்னர் குருந்தூர்மலையில் தமிழர்கள் வழிபாடியற்றுவதற்கு, சட்டவரன்முறைகளுக்கு உட்பட்டு நியாயபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் மட்டத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகியுள்ளமை இந்த நாட்டின் நீதித்துறைக்கும், ஜனநாயகத்துக்கும் விழுந்திருக்கிற சாட்டையடி மட்டுமல்ல, இதை மிகமோசமான இனவாதச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. இதற்கு, எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். 
2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக இருந்த திருமதி.சிறீநிதி நந்தசேகரன் அவர்கள் மீது, இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சியை அடியொற்றி, மீளவும் வடக்கின் தமிழ் நீதிபதி ஒருவர்மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகையதொரு உயிர் அச்சுறுத்தல், இலங்கையின் நீதித்துறையின் இயங்குநிலையும் மெல்லமெல்ல இராணுவமயப்படுத்தப்படுவதற்கான எத்தனமாகவே தென்படுகிறது. 
நீதித்துறையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இந்த நாட்டில், இன, மத ஆக்கிரமிப்புகளும், அடக்குமுறைகளும் எத்தனை வீரியமாய் இருக்கும் என்பதுபற்றி, சர்வதேச சமூகம் இனியேனும் கூருணர்வோடு செயலாற்ற வேண்டும் என்றும், இத்தகையதொரு நிலை, இன்னுமோர் தமிழ் நீதிபதிக்கு
ஏற்படாதிருக்க வழிவகை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். 
சிவஞானம் சிறீதரன்
நாடாளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி.
  • 164
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads