Category:
Created:
Updated:
ஜகமே தந்திரம் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் மூலம் தயாரிக்கப்படுகிறது, மேலும் சந்தோஷ் நாராயணனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜேம்ஸ், கலையரசன், சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் படத்தின் செம மாஸ் ஆன டீஸர் வெளியான நிலையில், தற்போது அந்த படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்த படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகபோவதாக அறிவித்துள்ளார்கள். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிய ரகிட ரகிட ரகிட மற்றும் புஜ்ஜி பாடல்கள் இன்னும் ஓயாமல் இருக்க இந்த அப்டேட் கிடைத்ததில் இருந்து தற்போது இன்னும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் தனுஷின் ரசிகர்கள்.