·   ·  23 news
  • 1 members
  • 0 friends

பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் பயணிகள் விமானம் சீரற்ற வானிலை காரணமாக ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
டார் எஸ் சலாம் நகரில் இருந்து வட மேற்கு நகரமான புகோபா நோக்கி பயணித்த உள்ளூர் விமானமே இவ்வாறு 43 பேருடன் விபத்துக்குள்ளாகியது.
26 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் தரையரங்குவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன் குறித்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து புகோபாவை பகுதியில் உள்ள விக்டோரியா ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

  • 890
  • More
Comments (0)
Login or Join to comment.