டுவிட்டர் 'புளூ டிக்கிற்கு' இனி மாதம் 8 டொலர் கட்டணம் அறவிடப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த வாரம் வாங்கியுள்ளார்.எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகின்றனர்.இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீல நிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம், குறிப்பிட்ட பயனர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.இந்நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிப்படுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதந்தோறும் 8 டொலர் வசூல் செய்யப்படவுள்ளதாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.