Ads
கனடாவில் கொரோனா தொற்று பற்றிய நிலவரம்
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 890பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 13ஆயிரத்து 47பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 495பேர் உயிரிழந்துள்ளனர். 31ஆயிரத்து 630பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 553பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இதுவரை எட்டு இலட்சத்து 58ஆயிரத்து 922பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
முககவசம் அணிதல், கையுறை அணிதல், கூட்டம் கூடுதலை தவிர்த்தல், சமூகஇடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை ஒவ்வொருவரும் தவறாமல் தொடர்ந்து கடைப்பிடித்து வரவேண்டியது அவசியம்.
Info
Ads
Latest News
Ads