தன்னுடைய சம்பாத்தியத்தில் புதுகார் வாங்கிய ஷிவானி
சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். 17 வயதில் சீரியலில் நுழைந்தவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர் என்பது மறுக்க முடியாத ஒன்று. பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற ஷிவானி நிகழ்ச்சியின் முடிவில் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.
ஷிவானி போல் கடந்த சீசனில் டேமேஜான ஆட்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஷிவானியின் தாயாரை வைத்தே அவரை கழுவி ஊற்ற வைத்து நல்ல டிஆர்பி பார்த்தது விஜய் டிவி. அதுமட்டுமில்லாமல் ஷிவானியை சக போட்டியாளர் பாலாவுடன் சேர்த்து கிசுகிசுவிலும் இறக்கி விட்டனர்.
அனைத்திற்கும் மேலாக ஷிவானி நாராயணன் எல்லாத் தரப்பு ரசிகர்களிடையேயும் வரவேற்பை பெற்றதற்கு காரணம் இன்ஸ்டாகிராமில் மாலை 5 மணிக்கு புகைப்படம் வெளியிடும் நடைமுறையை கையாண்டது தான். தினமும் அரை குறை ஆடையில் கவர்ச்சி புகைப்படங்களை சரியாக 5 மணிக்கு வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். அதன் விளைவு ஏகப்பட்ட விளம்பர படங்களில் நடித்து ஒரு பக்கம் தனியாக சம்பாதித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி, விளம்பரப் படங்கள் என சம்பாதித்ததை ஒட்டு மொத்தமாக சேர்த்து சமீபத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து பிஎம்டபிள்யூ காரை வாங்கினார். ஷிவானி சம்பாதித்து வாங்கினாலும் சமூக வலைதளங்களில் அவருக்கு தரக்குறைவான விமர்சனங்களே கிடைத்து வருகிறது.