கூலிங் கிளாஸ், வேஷ்டியுடன் கெத்தாக போஸ் கொடுத்த அருண் விஜய்
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தற்போது பல இயக்குனர்கள் அருண் விஜய்யை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.
அருண் விஜய் அக்னி சிறகுகள், சினம், பாக்சர் மற்றும் பார்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ஏவி 33 எனும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது.
அருண் விஜய் மற்றும் ஹரி கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அருண் விஜய் சமீபகாலமாக ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் ஹரியும் ஆக்சன் மற்றும் பஞ்ச் வசனங்களில் கலக்குபவர். இப்படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் எனவும் அடுத்தடுத்து இவருக்கு முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.
அருண் விஜய் கிட்டத்தட்ட தற்பொழுது ஐந்து படங்கள் நடித்துள்ளார் இந்த படங்கள் வெளியானால் போதும் அருண் விஜய் பெரிய அளவில் அனைவராலும் பாராட்டப்படுவார் என்கின்றனர். இவர் நடித்துவரும் ஏவி33 படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.