Category:
Created:
Updated:
இளையராஜா கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர். ஓவியராக புகழ்பெற்ற இவர், இயக்குநர் பார்த்திபன் இயக்கிய இவன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். அதே படத்தில் பார்த்திபனின் சிறுவயது கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட இளையராஜாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்தார் ஓவியர் இளையராஜா. அவருக்கு வயது 43. ஓவியர் இளையராஜாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.