சினிமா செய்திகள்
தற்போது அவர் குட் பேட் அக்லி படத்திற்கு தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தள
‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது
சென்னை அசோக்நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உதயம் திரையரங்கு. இதில் 4 திரையரங்குகளில் இயங்கி வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக
கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ?
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் வருக
ஜெயிலர் 2 ......வெளியான தகவல்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர்
சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி
குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம்
பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3
மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெ
35 வயது வரை சினிமாவில் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இங்கே காணலாம்.இந்த ஆண்டு தமன்னா நடிப்
கழுத்தில் சிலுவையுடன் ஸ்ருதிஹாசன்
உலக நாயகனின் மகள் ஸ்ருதிஹாசன் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு படமும் அவர் கைவசம் இருக்கிறது.மேலும் டகோயிட் படத்தில் இருந
பொங்கல் ரிலீசில் இருந்து பின் வாங்கிய வீரதீர சூரன்
செம கெத்தாக வீரதீர சூரன் படத்தில் மிரட்டுகிறார் விக்ரம். தங்கலான் படத்தில் கோமணத்தை கட்டிட்டு வந்த விக்ரமை இப்படி பார்த்தவுடன் ரசிகர்கள் ஆர்ப்பரித்து
சர்ச்சையில் சிக்கிய இளையராஜா
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டார்கோவிலில் நேற்று இளையராஜா அவருடைய ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு மாலையில் நாட்டியஞ்சலி நடைபெற
பாடகி ஸ்ரேயா கோஷலின லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
இந்தியாவில் பல மொழிப் பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். பல மொழிகளிலும் இவர் பாடல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 2002 ஆம் ஆண்டு தேவ்தாஸ் எ
ராதிகா ஆப்தே பெண் குழந்தைக்கு தாயானார்
தமிழில் தோனி படத்தின் மூலம் அறிமுகமான ராதிகா ஆப்தே அதன்பின் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், ஆகிய படங்களில் நடித்தார். சூப்பர்ஸ்டார் ரஜினியின்
Ads
 ·   ·  2147 news
  •  ·  1 friends
  • 1 followers

மீனவர் பிரச்சினைக்கு தமிழ் நாட்டு அரசாங்கமே தீர்வை காண முன்வரவேண்டும் - அன்னராசா வலியுறுத்து

கடந்த அரசாங்கம் மீனவர்களின் நலன்கருதி கிடப்பில் போட்ட சட்டத்தை தற்போதைய அனுர தலைமையிலான அரசாங்கம் மீளவும் நடைமுறைப்படுத்த இரகசியமான முறையில் முயற்சிப்பதற்கு தாம் எதிர்ப்பை தெரிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா குறித்த சட்டத்தை இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வெண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் கடந்தகால ஜனாதிபதிகள் வெளிப்படையாக பேசாவிட்டாலும் பிரச்சினை உள்ளதை வலியுறுத்தியிருந்தனர். ஆனால் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அது தொடர்பில் வெளிப்படையாக பேசியுள்ளார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அனுர தலைமையிலான அரசாங்கமாவது மீனவர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறித்த சங்கத்தின் வருடாந்த இறுதிக் கூட்டம்  இன்றையதினம் 31) யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் இடம்பெற்றது. அதன்பின்னர்  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

அதேவேளை கடற்றொழில் அமைச்சரும் பிரச்சினையை தீர்ப்பேன் தீர்ப்பேன் என்று கூறிவருகின்றார். ஆனால் தினமும் எங்களுடைய கடல்வளமும் வாழ்வாதாரமும்  இலங்கை இந்திய அரசுகளால் அழிக்கப்படுகின்றது.

குறிப்பாக இலங்கை மற்றும் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி தொழில்களை பயன்படுத்தியே எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்த புதிய அரசாங்கம் எமக்கு கொடுத்த கால அவகாசம் இன்றுடன் நிறைவுறுகின்றது  ஆனாலும் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை் இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசாங்கம் அல்ல தமிழ் நாட்டு அரசாங்கமே தீர்வை காண முன்வரவேண்டும்இ அவர்களுடனேயே பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதேநேரம் இதுவரையான காலத்தில் தமிழ் நாட்டு அரசாங்கம் மத்திய அரசின் பக்கம் பிரச்சினையை தட்டிவிட்டு தொடர்ந்தும் சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இதை ஏற்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 567
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads