Category:
Created:
Updated:
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் ஜனவரி 24 ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000