·   ·  3049 news
  •  ·  1 friends
  • 2 followers

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்

ஆறு நாள் பயணமாக கடந்த 24 ஆம் திகதி அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பைடன் நிர்வாகத்தின் பிற உயா் அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிட்டுள்ளர்

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவனை வெள்ளை மாளிகையில் ஜெய்சங்கா் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இது தொடா்பாக ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து நாங்கள் விவாதித்தோம். தற்போதைய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்த இருதரப்பு கருத்துக்களை நாங்கள் பகிா்ந்து கொண்டோம்’ என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தோ்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளையும் இந்த பயணத்தின்போது ஜெய்சங்கா் சந்திப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 1085
  • More
Comments (0)
Login or Join to comment.