·   ·  8243 news
  •  ·  5 friends
  • I

    9 followers

நடிகர் விஜய்யின் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

விஜய் அரசியல் வருகையால் திமுக கொஞ்சம் பதட்டம் அடைந்திருப்பதாகவும், எனவே தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளை பாதுகாத்து வைப்பதற்கும், கூடுதலாக சில கட்சிகளை இணைக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

விஜய் கட்சியின் மாநாடு நடப்பதற்கு முன்னர், 200 தொகுதிகள் போட்டியிடும் திட்டம் திமுகவுக்கு இருந்ததாகவும், ஆனால் தற்போது கூட்டணி கட்சிகளுக்கு கூடுதலாக தொகுதிகள் அளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தேமுதிகவுக்கு ரகசியமாக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தையும் திமுக எம்பி ஒருவர் மூலம் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் அரசியல் வருகையால் சிறுபான்மையர் ஓட்டு திமுகவிலிருந்து விலகலாம் என்றும், அதை ஈடு செய்யும் வகையில் தேமுதிக கூட்டணியில் இழுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை அதிமுக கூட்டணியிலிருந்து எந்த வெற்றியும் பெறாத தேமுதிக, திமுக கூட்டணிக்கு அழைப்பதன் மூலம், அதை ஏற்றுக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.  

  • 622
  • More
Comments (0)
Login or Join to comment.