தி.மு.க.வில் புயலையும் சுனாமியையும் கிளப்பி இருக்கிறார் ரஜினிகாந்த் - தமிழிசை
நடிகர் ரஜினிகாந்த் திமுகவில் புயலையும் சுனாமியையும் கிளப்பியுள்ளார் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் ஸ்ரீ வேணுகோபாலசாமி கோயிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சாமி தரிசனம் செய்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் திமுகவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த் திமுக ஆலமரம் போல் கூறி என்று கூறியிருந்தார். தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் ஆலமரம் போல் ஒரு சில அரசியல் கட்சிகள் இருந்தன. ஆனால் அங்கு ஆட்சி மாறிவிட்டது.
ரஜினிகாந்தின் பேச்சு திமுகவில் புயலையும் சுனாமியையும் உருவாக்கி உள்ளது. திமுகவுக்காக கடுமையாக உழைத்த துரைமுருகன் இன்று ஸ்டாலினுக்கு கீழ் இருக்கிறார், உதயநிதிக்கு கீழே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் வாரிசு அரசியல் வேண்டாம் என்று நாங்கள் கூறுகிறோம்.
உதயநிதி ஸ்டாலின் துரைமுருகனின் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் அப்படி என்றால் ரஜினிகாந்தின் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளலாமா? திமுக தொண்டர்கள் இதை சிந்திக்க வேண்டும் என்று தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.