பட்டாசு ஆலை வெடி விபத்து – நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
தமிழ்நாட்டில் - விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ் உரிமத்துடன் செயற்பட்டு வரும் ஜெயந்தி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பட்டாசு ஆலையில், பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்களை வாகனத்தில் இருந்து இறக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு வேதனை அடைந்துள்ளதாகவும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 50.000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.