மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் - சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பணிப்பாளர் அறிவிப்பு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பில் பல்வேறுகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.
கடந்த 27 ஆம் திகதியன்று மரியராஜ் சிந்துஜா என்ற 27 வயதான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவ தினத்தன்று நோயாளர் விடுதியிலிருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் கவனயீனமாக இருந்தமையால் அப் பெண் மரணித்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இப் பெண்ணின் மரணம் தொடர்பில் பல தரப்பினராலும் வன்மையான கண்டனங்கள் முன் வைக்கப்பட்டன.
இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று உரிய வைத்தியர் மற்றும் கடமையில் இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.
மேலும் குறித்த பெண்ணின் மரணம் குறித்து நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் உரிய தரப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து மக்கள் மத்தியில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மீது உள்ள அவநம்பிக்கை தகர்த் தெரியப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கப்பட்டு வருகின்றது
இதன்போது உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்த நிலையில் உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00