சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

உலகளவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு – எப்படி சரிசெய்வது?

உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சைபர் தாக்குதல் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 40 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள்தான் உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திடீரென்று பல்வேறு பயனர்களின் கணினி திரை நீல நிறமாக மாறி, ரீ-ஸ்டார்ட் ஆகி வருகிறது. இப்படியான சிக்கலுக்கு ப்ளூ ஸ்க்ரீன் ஆப் டெத் என்று பெயர். மேலும் மைக்ரோசாப்ட் 365, XBox, Outlook ஆகியவை செயலிழந்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, உள்ளிட்ட பெரும்பாலான நாட்டில் வசித்து வருபவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் உலக அளவில் வங்கி சேவை, விமான சேவை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்களை தரையிறங்குவது, விமானங்களின் செக்-இன் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புகெல்லாம் காரணம் Crowdstrike அப்டேட்தான் எனக் கூறப்படுகிறது.

CrowdStrike என்பது அமெரிக்காவில் உள்ள சைபர் செக்யூரிட்டி சாப்ட்வேர் நிறுவனமாகும். இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனம் மட்டுமின்றி பல முன்னணி நிறுவனங்களுக்கு இணைய பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் CrowdStrike மென்பொருளின் அப்டேட்தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் பாதிப்புக்கு காரணம் என டெல் டெக்னாலஜிஸ் நிறுவனம் கூறுகிறது. CrowdStrike இன் ஃபால்கன் சென்சார் செயலிழந்து விண்டோஸ் சிஸ்டத்துடன் முரண்பட்டதால் தரமற்ற அப்டேட் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒப்புக்கொண்ட நிறுவனம் இந்தச் சிக்கலைத் தீர்க்க எங்கள் பொறியாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் என்றும், இதற்காக யாரும் சப்போர்ட் டிக்கெட்டை அணுக வேண்டாம் எனவும் கூறியுள்ளது. மேலும் பிரச்னை சரிசெய்யப்பட்டதும் பயனர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த பிரச்னைக்கு சைபர் தாக்குதல் காரணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினையை எவ்வாறு சரி செய்வது?

CrowdStrike-ன் Falcon சென்சருக்கான அப்டேட் காரணமாக இந்த எரர் ஏற்பட்டுள்ளது. எனினும் மற்றொரு அப்டேட் மூலம் இந்த சிக்கலை சரி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதன்படி, விண்டோஸ் 10-ல் தற்போது ஏற்பட்டுள்ள BSOD சிக்கலைச் சரிசெய்ய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

1.விண்டோஸ் இயங்குதளத்தை ஷேப் மோட் (Safe Mode) அல்லது WRE மோடில் பூட் செய்யுங்கள்.

2. C:\Windows\System32\drivers\CrowdStrike-க்கு செல்லவும்.

3.”C-00000291*.sys” என்ற பைலை கண்டுபிடித்து, டெலிட் செய்யவும்.

4. இறுதியாக எப்போதும் போல் இயங்குதளத்தை பூட் செய்யவும்.

  • 766
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads