Category:
Created:
Updated:
தமிழ் சினிமாவில் நடிகர் பாடகர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். கனா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அடுத்ததாக ஆர்டிகல்15 என்ற படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது மனைவி சிந்துஜா கொரோன வைரஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெறும் 34 வயதாகும் இவர் உயிரிழந்தது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது.
தன்னுடைய மனைவி உயிரிழந்த நிலையில் அவரின் முகத்தை கூட பார்க்க முடியாத சூழலில் சிக்கியுள்ளார் அருண் ராஜா காமராஜ். காரணம் அவரும் கொரானாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.