Ads
May 18 Tamil Genocide Remembrance Day
May 18 Tamil Genocide Remembrance Day photos
Empty
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, கார்த்திகை மாதம் 25ஆம் தேதி மேஷம் -ராசி: தாய்மாமன் வழியில் அனுசரித்து சென்றால் சாதகமான சூழ்நிலைகள் அமையும். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் முக்கியமான சில பிரமுகர்களின் அறிமுகங்கள் ஏற்படும். இனம் புரியாத சில நினைவுகள் மூலம் கவலைகள் தோன்றி மறையும். ஆதாயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம் ராசி: குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தகவல் துறைகளில் இருப்பவர்களுக்கு லாபங்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலம் உண்டாகும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். ஜெயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மிதுனம் -ராசி: மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். உறவினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வி சார்ந்த செயல்களில் ஆதாயம் ஏற்படும். மனை சார்ந்த செயல்பாடுகளில் லாபம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு கடகம் -ராசி: பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். உறவினர்களால் சுபவிரயங்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் அலைச்சல் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு சிந்தித்து முடிவெடுக்கவும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் மேம்படும். நிம்மதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் சிம்மம் -ராசி:பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபாரம் சார்ந்த எண்ணங்களை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் தாமதமாக நிறைவேறும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் கன்னி -ராசி: கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். சமூகப் பணிகளில் புதிய அறிமுகங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வழக்கு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை துலாம் -ராசி: நெருக்கமானவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சமூக பணிகளில் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் விருச்சிகம்- ராசி: சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவரிடத்தில் அனுசரித்து செல்லவும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். முக்கியமான ஆவணங்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் தனுசு -ராசி: உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணியில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மகரம் -ராசி:உடன் பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் வரவுகள் மேம்படும். புதுவிதமான சூழலால் திருப்தியான மனநிலை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கும்பம் –ராசி:வியாபார பணிகளில் ஆதாயம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சில்வர் மீனம் -ராசி: மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சவாலான சூழ்நிலைகள் தோன்றி மறையும். புதுவிதமான பொருட்சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 36
பாரியளவிலான ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையர்கள் இருவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கே இந்த பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைக்கு மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்வதில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் கையூட்டல் பெற்றதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த இருவரினது குடும்ப உறுப்பினர்களும் தமது நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் வகையில் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.000
- 46
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகிய குறைந்த காற்றழுத்த மண்டலம் மேலும் வலுவடைந்து எதிர்வரும் 11 ஆம் திகதியளவில் இலங்கை - தமிழக கடற்பரப்பை அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேவேளை, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென்மேற்கு வங்காள விரிகுடாவின் கடற்பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தொடர்ந்தும் நீடிப்பதனால் மீனவர்கள் மற்றும் கடல்சார் பணியாளர்கள் குறித்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த கடற்பகுதிகளில் காற்றானது 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது000
- 44
ஸ்ரீ குரோதி வருடம் கார்த்திகை மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.12.2024சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று அதிகாலை 03.32 வரை நவமி. பின்னர் தசமி.இன்று காலை 11.34 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 47
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி இந்த மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 858 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 46,385 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 19,927 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.000
- 47
உக்ரேனிய நகரமான டினிப்ரோவில் ரஷ்யாவினால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ரக ஏவுகணை தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. “ஒரேஷ்னிக்” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை கடந்த மாதம் 21 ஆம் திகதி முதன் முதலாக உக்ரேனுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டது. ஏவுகணை பிரயோகம் இடம்பெற்று ஒரு சில மணி நேரத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய போது, நேரடியாக நேட்டோ அமைப்பிற்கு அச்சுறுத்தலை வெளிப்படுத்தினார். உக்ரேனின் நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராக அதன் அடுத்த பயன்பாடு இருக்கக் கூடுமென அவர் மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கையினை விடுத்தார்.இந்த நிலையில், ரஷ்யாவின் மூலோபாய ஏவுகணைப் படையணிகளின் தலைவர் ஜெனரல் சேர்ஜி கரகாயேவ், “ஒரேஷ்னிக்” கனரக அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியதுடன் எந்த ஐரோப்பிய இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறனைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். சாதாரணமாக 500 முதல் ஐயாயிரத்து 500 கிலோமீற்றர் தூரம் பயணிக்கக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளதெனவும் ரஷ்யாவின் மூலோபாய ஏவுகணைப் படையணிகளின் தலைவர் ஜெனரல் சேர்ஜி கரகாயேவ் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கடந்த 2019 ஆம் ஆண்டில் வொஷிங்டன் மற்றும் மொஸ்க்கோவினால் கைவிடப்பட்ட சோவியத் ஒன்றிய கால ஒப்பந்தத்திற்கு அமைய, இந்த வகையிலான ஏவுகணைகள் தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.000
- 51
2024 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தினால் 4 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டக்கூடிய வெளிப்படையான வேலைத் திட்டத்தின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு 361 மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதாக சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்துக்குப் பின்னர் 2022 ஆம் ஆண்டுவரை மதுவரி அனுமதிப்பத்திர விநியோகத்துக்கு அரசாங்கம் கட்டணம் எதனையும் அறவிட்டிருக்கவில்லை. எனவே, நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கும் பொருட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதற்கமைய, நேரடி வரியை இழப்பதற்கு மாற்றாக, அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்குக் கட்டணத்தை அறவிட்டு மதுவரி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. கடந்த தேர்தல் காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மதுவரி ஆணையாளர் நாயகத்துக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய, மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய அரசாங்கம் இலவசமாக எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கவில்லை. எனினும், நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இந்த மதுபான அனுமதிப்பத்திர விநியோக செயற்பாட்டைக் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை கவலையளிப்பதாகவும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்000
- 53
மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மின் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர் இதனைத் சுட்டிக்காட்டியுள்ளார்.நீர் மின் உற்பத்தியினுடாக 65 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் இலங்கை மின்சாரசபைக்கு செலவு குறைவடைந்துள்ளது. இதனால் பாரிய இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தை குறைக்க முடியாது? வருடத்துக்கு இரு திருத்தங்கள் எனக் காணப்பட்ட முறைமை ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தால் 4 ஆக அதிகரிக்கப்பட்டது.ஒக்டோபரில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனினும் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.தேர்தல் மேடைகளில் 30 சதவீதமாக மின் கட்டணம் குறைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.ஆனால் அவ்வாறு 30 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைப்பதற்கு 3 ஆண்டுகள் செல்லும் என்று வசந்த சமரசிங்க குறிப்பிடுகின்றார்.மின் கட்டண திருத்தம் குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் வசந்த சமரசிங்கவுக்கு இல்லை என்பதை கூட அவர் அறியாமலிருக்கின்றார். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கே அந்த அதிகாரம் இருக்கிறது என்றார்.000
- 57
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, பண்டிகைக் கால வியாபாரங்கள் மந்த நிலையில் உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.அத்துடன் தற்போதைய அரசாங்கம் கூறியது போன்று எதுவித விலைகுறைப்பும் ஏற்படாத நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.000
- 56
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பினால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையில் இந்த ஆண்டும் தேங்காய் ஏற்றுமதி செய்து பெரும் இலாபம் ஈட்டுவதற்கு வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர் என்று மக்கள் போராட்டக் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.மேலும், மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய தேங்காய் இல்லாவிட்டாலும், தேங்காய் ஏற்றுமதி மூலம் பெரும் இலாபத்தை ஈட்ட ஒரு தரப்பினர் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.எனவே மக்களுக்கு பல்வேறு வாக்கறுதிகளை கூறி ஆட்சியை பிடித்த இந்த அரசாங்கம் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார். அத்துடன், தேங்காய் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தேங்காய் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 000
- 59
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வருமான அறிக்கை தொடர்பான விபரத்தை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது.வருமான அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 6 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட 1,042 பேர் வருமானம் - செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை எனவும் ஆணையகம் கூறியுள்ளது.தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்த வேளையில், அதில் 7,846 வேட்பாளர்கள் மட்டுமே வருமானம்-செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.000
- 62
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். ஐக்கிய நாடுகள் சபையானது கடந்த 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. இது உலக மனித உரிமைப் பேரறிக்கை என அழைக்கப்பட்டது.அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் திகதி உலக நாடுகள் அனைத்தாலும் ‘மனித உரிமை தினம் ‘ கொண்டாடப்படுகிறது.1948 டிசம்பர் 10 ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது.ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயோர்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.அத்துடன் ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகிறது.00
- 73
ஜார்ஜ் பூங்கா செயின்ட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 109 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.348 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை பெற்றிருந்தது.குசல் மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.இதனால், இலங்கையின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் மீதமருந்த நிலையில் 143 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது.இந்த நிலையில், போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க நீண்ட நேரம் தாக்கு பிடிக்காத இலங்கை அணியானது மேலதிகமாக 33 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.இதனால் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை தென்னாப்பிரிக்கா 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், 2025 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 63.33 புள்ளிகளுடன் முதலிடத்துக்கும் முன்னேறியது.இதேவேளை, தொடரின் தோல்வி மூலம் இலங்கையின் 2025 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான கனவானது சிதைந்துள்ளது00
- 74
ஜார்ஜ் பூங்கா செயின்ட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 109 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.348 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை பெற்றிருந்தது.குசல் மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.இதனால், இலங்கையின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் மீதமருந்த நிலையில் 143 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது.இந்த நிலையில், போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க நீண்ட நேரம் தாக்கு பிடிக்காத இலங்கை அணியானது மேலதிகமாக 33 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.இதனால் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை தென்னாப்பிரிக்கா 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், 2025 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 63.33 புள்ளிகளுடன் முதலிடத்துக்கும் முன்னேறியது.இதேவேளை, தொடரின் தோல்வி மூலம் இலங்கையின் 2025 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான கனவானது சிதைந்துள்ளது00
- 72
தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார் அவர். அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது. அவரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தது சற்று வியப்பை தந்தது. மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது. மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார். உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது. வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக் கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது. பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப்போய் விட்டது. இவருக்கோ குழப்பம். எதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது. இங்கே எதற்காக வந்தது..?எழுந்து குளித்து உடைமாற்றி காலை உணவு முடித்து அலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது. வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார். மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னார் பணியாள்.மறுநாள் காலை. மறுபடியும் அதே நேரம். அதே நாய். அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு அதே இடத்தில் தூங்கி விட்டது. மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது.வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் ஒரு துண்டு சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார். மறுநாள் அந்த நாய் வரும்போது கழுத்தில் வேறு ஒரு துண்டு சீட்டு இருந்தது. படித்து விட்டு உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படி என்ன தான் எழுதியிருந்தது.."அன்பு மிக்கவருக்குவணக்கம். இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக காலை வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது. தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவதை அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி.பி.கு. :- ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா..?நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன.
- 216
எட்மண்டன் காவல்துறையின் மனிதப் படுகொலை பிரிவினர் வணிக வளாகம் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு குழந்தை திடீரென இறந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொறுப்பேற்றுள்ளனர்.தெற்கு எட்மண்டனில் சனிக்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் பார்சன்ஸ் சாலை மற்றும் எல்லெர்ஸ்லி சாலை எஸ்.டபிள்யூ பகுதியில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திலேயே குழந்தை இறந்து கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.உடற்கூராய்வு வியாழக்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் இந்த மரணம் அப்பகுதியில் உள்ள எந்தவொரு உள்ளூர் வணிகங்களுடனும் தொடர்புடையதாக நம்பவில்லை என்று போலீசார் கூறுகின்றனர்.
- 242
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, கார்த்திகை மாதம் 24ஆம் தேதி மேஷம் -ராசி: சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். சகோதர சகோதரிகள் வகையில் சுபவிரயங்கள் ஏற்படும். எதிர்பாராத செய்திகள் மூலம் சேமிப்புகள் குறையும். ஜாமீன் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை ரிஷபம் ராசி: எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மிதுனம் -ராசி: உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் கடகம் -ராசி: நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உயர்கல்வி சார்ந்த குழப்பங்கள் குறையும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். இறை சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் சிம்மம் -ராசி:உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகளால் நெருக்கடிகள் ஏற்படும். வாகன பயணங்களில் பொறுமையுடன் இருக்கவும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கன்னி -ராசி: நண்பர்கள் வழியில் ஒற்றுமை ஏற்படும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தவறிப் போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு துலாம் -ராசி: உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் சாதகமான உதவிகள் ஏற்படும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். புதுவிதமான கனவுகள் உருவாகும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் விருச்சிகம்- ராசி: குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் அலைச்சலும் மகிழ்ச்சியும் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பழைய நினைவுகள் மூலம் இன்பமான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். மறதி விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் தனுசு -ராசி: எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். சுபகாரியங்களில் விவேகம் வேண்டும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் அமையும். நிம்மதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் மகரம் -ராசி:எதிர்ப்புகளை சாமார்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். நவீன தொழில்நுட்பக் கருவிகளில் ஆர்வம் ஏற்படும். சிறு மற்றும் குறுந்தொழிலில் கவனம் வேண்டும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஜெயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கும்பம் –ராசி:கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். கூட்டாளிகளுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மீனம் -ராசி: மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். கேளிக்கை விஷயங்களால் சேமிப்புகள் குறையும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். சமூக சிந்தனைகளால் மனதில் மாற்றம் பிறக்கும். குடும்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் குறையும். ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். முயற்சி அதிகரிக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 255