அறிவோம் ஆன்மீகம்

  •  ·  Standard
  • 2 members
  • 2 followers
  • 1084 views
ஆயுத பூஜை என்பது ஒவ்வொரு வருடமும் நவராத்திரியின் 9வது நாளில் கொண்டாடப்படும் இந்துக்களின் பண்டிகையாகும் .இது அஸ்திர பூஜை என்றும் அழைக்கப்படுகிறது . இது ஒரு பாரம்பரிய மற்றும் குறிப்பிடத்தக்க பண்டிகையாகும், பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் தங்களின் எதிர்காலம் சிறப்பாக, தொழில் நல்ல முறையில் லாபத்துடன் நடக்க இந்த நன்னாளில் அம்பாளை வேண்டுகிறார்கள்.மக்கள் தங்கள் கருவிகள், கருவிகள் மற்றும் வாகனங்களை கழுவி பின்னர் வணங்குகிறார்கள். வியாபாரிகளும் தங்கள் கடைகளை சுத்தம் செய்து பூஜை செய்கின்றனர். பூஜை முடிந்ததும் கடைகள் மூடப்படும். ஆயுதபூஜை என்பது அலுவலக புத்தகங்கள், பள்ளி புத்தகங்கள் போன்றவற்றை வழிபடும் ஒரு பொன்னான நாளாகும். பண்டிகையின் வெவ்வேறு சடங்குகளை செய்ய மக்கள் பாரம்பரிய உடைகளில் தயாராகி, பண்டிகை வாழ்த்துக்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்கிறார்கள்.அனைத்து வகையான இசைக்கருவிகள் மற்றும் பள்ளி புத்தகங்கள் சரஸ்வதி தேவியின் முன் வைக்கப்பட்டு, குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களால் பூஜை நடத்தப்படும். 
  • 1722
இந்தியாவில் - தமிழ்நாட்டில் - தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஊர்தான் இந்த தோரணமலை. இந்த ஊரில்தான் மலை மீது தோரணமலை முருகன் கோவில் கொண்டுள்ளான். தேரையர் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடமே இந்த மலை. இந்த மலையில்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு அகத்தியர் சித்த வைத்திய சாலை வைத்துள்ளார். அகத்தியரின் சிஷ்யர்களில் பலர் இங்குதான் வைத்தியம் கற்றுக்கொண்டனர். தேரையரும் அகத்தியரின் சீடரே ஆவார்.ஒரு காலத்தில் மன்னன் ஒருவனின் தலைகுள் தேரை தவளை குஞ்சி ஒன்று இருந்து பாடாய் படுத்தியது. தேரையர் சித்தர் அவனுக்கு இங்குதான் கபால அறுவை சிகிச்சை செய்தார். மண்டை ஒட்டை கலட்டி எடுத்ததும், தேரை தென்பட்டது. அதை எவ்வாறு மூளைக்கு பாதிப்பு இல்லாமல் எடுக்க என எல்லோரும் சிந்தித்தபோது.தேரையர் ஒரு பானையில் தண்ணீரை கொண்டு வந்து மன்னனின் தலை அருகே வைத்தார்.தேரை அதுவாக பானையில் குதித்தது. பின்பு திறந்த கபாலத்தை மூலிகைகள் கொண்டு அடத்தார். இதனால்தான் இவர் தேரையர் என பெயர் பெற்றார். உலகிலேயே முதல்முதலில் கபால அறுவை சிகிச்சை நடந்த இடம் தோரணமலைதான். நோய் நொடிகள் அனைத்தையும் இந்த முருகனை காண மலை மீது ஏறும் போதே மூலிகை காற்றுகள் குணமாக்கிவிடும். பின்பு முருகன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும், தைரியத்தையும் தருவான். திருமணம், குழந்தை, கல்வி, தொழில், உடல் நலம் போன்ற அனைத்திலும் சிறப்பை இந்த கந்தன் தருவான். மலை மீது பல சுனைகள் உண்டு. இவற்றில் குழித்தால் பாவங்கள் நீங்கும். மன தெழிவு கிட்டும். மலை மீது பத்திரகாளியம்மன் கோவிலும், ஸ்ரீ இராமரின் பாதமும் இங்கே உண்டு.இராவணனை அழிக்க இராமருக்கு அகத்தியர் பிரம்மா அஸ்திரத்தை இங்குதான் தந்து அனுப்புகிறார். மேலும் இந்த மலை மிது விசும் தென்றல் காற்று மிக பெரும் ஆழ்ந்த அமைதியை தரும். இந்த மலையில் இன்னொரு முக்கியமான அதிசயம் என்னவென்றால், அம்மாவாசை, பௌர்ணமி மற்றும் முக்கியமான ஆன்மீக நாட்களில் இங்கு சித்தர்கள் பூசை செய்ய உளாவுவார்கள் என்று பல பக்தர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் இந்த நாட்களில் இரவு நேரங்களில் இங்கே மணி அடிக்கும் சத்தம் கேட்குமாம்.அது எங்கிருந்து வருகிறது என்று எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அரூபமாக சித்தர்கள்தான் பூசை நடத்துகிறார்கள் இந்த நாட்களில் என அனைவரும் நம்புகின்றனர். இன்னும் இந்த தோரணமலையில் அகத்தியர் வழிபட்ட லிங்கமும் உண்டு. நாகப் புற்றும் உண்டு. இங்கே மரணமில்லா பெருவாழ்வு தரும் மூலிகைகளும் மறைந்து உள்ளதாக கூறுவர். இப்படி தோண்டத்தோண்டப் பல அதிசயங்கள் நிறைந்த மலைதான் இந்த தோரணமலை.
  • 1963
ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல*.அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம். அந்த ஆலயத்தில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே மொட்டையாக நின்று போனது. எத்தனையோ பேர் முயன்றும் அந்த கோபுரத்தைக் கட்ட இயலவில்லை.ஈசனுக்குத் தெரியும், எந்த வேலையை, யாரிடம் கொடுத்து, எப்படி முடிக்க வேண்டும் என்று. அதன்படி திருவண்ணாமலை ஆலய வடக்குக் கோபுரத்தைக் கட்ட அம்மணி அம்மாளை ஈசன் தேர்வு செய்து அருள் புரிந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள சென்னசமுத்திரத்தில் கோபால் பிள்ளை- ஆயி தம்பதிக்கு 1735-ம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார். அவரது உண்மையான பெயர் அருள்மொழி.சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது.தங்கள் மகள் எப்போதும் அருணாசலேஸ்வரர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து பயந்து போன அவர் பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தனர்.இதை அறிந்த அம்மணி அம்மாள், “நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை” என்று கூறி, வேதனைத் தாங்காமல் சுமார் 1 மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்துக்குள் குதித்து விட்டார். ஊரே திரண்டு வந்து குளத்துக்குள் இறங்கித் தேடினார்கள். அம்மணி அம்மாளை காண முடியவில்லை. மூன்றாவது நாள் குளத்தில் இருந்து அம்மணி அம்மாள் வெளியில் வந்தார். ஊரே திரண்டு ஆச்சரியப்பட்டது.குளக்கரை மண்ணை எடுத்து அவர் கொடுக்க, அது அவல் பொரியாக மாறியது. அம்மணி அம்மாள் சித்தப்புருஷராக மாறி இருப்பது அப்போதுதான் அவர் பெற்றோருக்கும், ஊருக்கும் தெரிய வந்தது. தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும், கிரிவலம் செல்வதுமாக இருந்த அவருக்கு ஒருநாள், “வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு” என்று ஈசன் உத்தரவிட்டார். அம்மணி அம்மாள் சித்தர் சக்தி பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது.அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். இப்படி சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் மேற்கொண்டார். கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது, அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது.பொது மக்களிடமும், வணிகர்களிடமும் திரும்ப, திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும், பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார். மறுநாளே மைசூருக்கு பயணமானார். அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரை உள்ளே விட மறுத்தான்.அம்மணி அம்மாளின் எளிமையானக் கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த வாயிற்காப்பாளன் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்தான். காலையில் வந்தவர் மதியம் வரை அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்தில் ஒரு சுவாரசியம் நடந்து கொண்டிருந்தது. லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். பொதுவாக சித்தர்களுக்கு ஒரே நேரத்தில் 2 அல்லது 3 இடங்களில் தோன்றும் ஆற்றல் உண்டு.இந்த ஆற்றலைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார். உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். “நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும், திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி, அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும், பொருளும் கேட்க வந்திருப்பதாக கூறினார். மேலும் வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால், ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் பார்த்தார்.பிறகு வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன், சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து, “உங்களை நான் உள்ளே விடவில்லையே. வெளியில்தானே அமர்ந்திருந்தீர்கள். உள்ளே எப்படி வந்தீர்கள்?” என்றான். உடனே மகாராஜா, நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு, வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார்.அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, சபைக்குள்இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார். உடனே வந்திருப்பவர் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார். அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார். நன்கு உபசரித்தார். பட்டுச்சேலை ஒன்று பரிசளித்தார். பிறகு தனது பட்டத்து யானை மற்றும் குதிரைகள், ஓட்டகங்களில் நிறைய பொன்னும், பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா அனுப்பி வைத்தார்.மைசூர் மகாராஜா கொடுத்த பொன், பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையார், அவர் கனவில் தோன்றி, “கோபுர வேலையைத் தொடங்கு. தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில், அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுக்க, அது அவரவர் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக மாறியது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் மனதில் துணிச்சலும், இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் தெளிவுபடுத்தினார். அவரது விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர்.171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பே கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும்.திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை எல்லோரும் “அம்மணி அம்மன் கோபுரம்” என்று அழைக்க நாளடைவில் அது நிலைத்துப் போனது. இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும், கோபுரத்துக்கும், ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.பிறகு துறவி போல வாழ்ந்த அவர் பல்லாயிரக்கணக்கான வர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார். திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50-வது வயதில் 1875-ம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8-வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் விபூதிப் பிரசாதம் மிகவும் புகழ் பெற்றது. மனக் கவலைகளை விரட்டும் மகத்துவம் அந்த ஜீவ சமாதி திருநீறுக்கு உண்டு.அம்மணி அம்மாள் ஈசனோடு கலந்து சுமார் 150 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு அருபமாக வந்து தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறார். குறிப்பாக கிரிவலம் வரும் பக்தர் களிடம் அவர் பேசுவதாக, அறிவுரைகள் சொல்வதாக நம்பப்படுகிறது. அவர் ஜீவ சமாதியில் சிறிது நேரம் தியானம் செய்தாலே மனம் லேசாவதை உணரலாம்.
  • 1690
காசிக்கு நிகரான ஆலயம் ஒன்று தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ளது. பெரியகுளத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தான் காசிக்கு நிகரான ஆலயம் ஆகும். இந்தியாவில் - தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் வாரிசான ராஜேந்திர சோழனால் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது பழமையான கோவில். எனவே இக்கோவிலுக்கு அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில் என்ற ஒரு பெயரும் உண்டு. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் தொல்லியல் துறையால் மிகச் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.இக்கோவிலின் இடது புறம் வற்றாத ஜீவநதியாகிய வராக நதி ஓடுகிறது. இந்த வராக நதியின் இரு புறத்திலும் ஒன்றை ஒன்று எதிர் எதிராக பார்த்த வண்ணம் ஆண் மருத மரம் ஒன்றும் பெண் மருத மரம் ஒன்றும் உள்ளது. அதனால் இக்கோவில் காசிக்கு நிகரான ஆலயமாக போற்றப்படுகிறது. மேலும் இக்கோவிலில் சரஸ்வதி, லட்சுமிக்கென தனித்தனியாக பூஜைகள் நடத்தப்படுகிறது. படைப்பு கடவுளான பிரம்மனுக்கு என்று தனியாக சன்னதி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. உயர்ந்த கோபுரத்தை தாங்கியுள்ள பழமையான இக்கோவில் பல்வேறு சிறப்புகளை பெற்றதாக உள்ளது. அதில் முக்கியமானது என்னவென்றால் 64 திருவிளையாடல்களில் ஒன்றான பன்றிக்கு பால் கொடுத்த படலம் என்கிற திருவிளையாடல் நடைபெற்ற இடம் இதுதான் என சொல்லப்படுகிறது. எனவே இத்திருத்தலம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகிறது.ராஜேந்திர சோழன் ஒருநாள் தனது படைகளுடன் இக்கோவில் அமைந்துள்ள காட்டுப்பகுதிக்கு வேட்டையாட வந்ததாகவும் அவ்வாறு வேட்டையாடும் போது தனது அம்பை எய்தி பன்றி ஒன்றைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இறந்து போன அந்தப் பன்றியானது சற்று நேரத்துக்கு முன்புதான் குட்டிகளை போட்டு தனது குட்டிகளுக்கு பால் கொடுத்து கொண்டிருந்ததாம். இதை சரியாக கவனிக்காத மன்னரின் செயலால் அம்பு துளைத்து பன்றியானது மரணத்தை தழுவவே, பசியோடு தவித்த அதன் குட்டிகளுக்கு முருகப்பெருமானே, பன்றித் தலையோடு வந்து பால் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்த ராஜேந்திர சோழன் தன் தவறை உணர்ந்து முருகப்பெருமானிடம் மன்னிப்பு கேட்டதோடு அந்த இடத்தில் முருகப்பெருமானுக்கு கோவில் ஒன்றை பிரமாண்டமாக எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. அதுதான் இந்த அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோவில்.மேலும் இத்திருத்தலத்தில் அறம் வளர்த்த நாயகி வீற்றிருப்பதாகவும், சூரசம்ஹாரம் நடைபெறும்போதும், அதற்காக வேல் வாங்கும் போதும் அம்பாளிடமிருந்து வேலானது தானாக வந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இக்கோவிலில் சூரசம்காரம் நிகழ்வும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேலும் இங்கு அஷ்டமி மாத திருவாதிரை, சங்கடஹரா சதுர்த்தி போன்ற நாட்களில் எல்லாம் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் இக்கோவிலில் நேத்தி கடன் செலுத்தும் பக்தர்களுக்கு திருமண தடை நீங்குவதாகவும், தீராத வயிற்று உபாதைகள் நீங்கி வளமுடன் வாழ்வதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
  • 970
வாழ்வில் ஒருமுறையேனும் திருநீர்மலை திவ்விய க்ஷேத்திரத்துக்கு வந்து, நான்கு வித பெருமாளையும் கண்ணாரத் தரிசித்து வேண்டினால், நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.பெருமாளின் கோயில்களில் மிக முக்கியமான கோயில்களும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில்களும் திவ்விய தேசங்கள் என்று போற்றப்படுகின்றன. மொத்தம் 108 திவ்விய தேசங்கள் என்று போற்றி வணங்கி வருகிறோம். அப்படியான அற்புதத் தலங்களில், திருநீர்மலை திருத்தலமும் ஒன்று.அஷ்ட சயனங்கள் என்பார்கள். பெருமாளின் அஷ்ட சயன திருக்கோலங்கள் அமைந்துள்ள திருத்தலங்கள் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ர சயனம் என்பார்கள். திருவள்ளூர் திருத்தலத்தில் வீர சயனம் என்று போற்றுவார்கள்.திருக்கடல் மல்லை என்று புகழப்படும் மாமல்லபுரத்தில், தல சயனம் என்கிறது ஸ்தல புராணம். திருக்குடந்தை திருத்தலத்தில் உத்தாயன சயனம் என்றும் திருப்புல்லாணி திருத்தலத்தில் தர்ப்ப சயனம் என்றும் சொல்லுவார்கள்வைஷ்ணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீரங்கம் தலத்தைத்தான் சொல்லுவார்கள். அத்தகைய பெருமைமிக்க தலத்தில், புஜங்க சயனமாக பெருமாள் திருக்காட்சி தருகிறார்.திருச்சித்திரக்கூடம் என்று கொண்டாடப்படும் சிதம்பரத்தில், போக சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். எட்டாவதாக திருநீர்மலை திருத்தலத்தில், மாணிக்க சயனக் கோலத்தில் சேவை சாதிக்கிறார் பெருமாள்.இந்தியாவில் - சென்னை பல்லாவரம், பம்மலுக்கு அருகில் உள்ளது திருநீர்மலை திவ்விய க்ஷேத்திரம். அரங்கன் குடிகொண்டிருக்கும் இந்தத் தலத்தை, ஸ்வயம் வயக்த க்ஷேத்திரம் என்று சிலாகிக்கிறது ஸ்தல புராணம்.அதாவது, மனிதர்களால் உண்டுபண்ணாமல் தானே ஏற்பட்ட சிலாமேனி என்று அர்த்தம். சைவ திருக்கோயில்களில் சுயம்பு மூர்த்தம் என்று சொல்வது போல், வைஷ்ண தலங்களில், ஸ்வயம் வயக்தம் என்பார்கள்.இப்படி ஸ்வயம் வயக்த க்ஷேத்திரங்களாக, ஸ்ரீரங்கம் திருத்தலம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், ஸாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி, தோத்தாத்ரி எனப்படும் திருநீர்மலை முதாலான க்ஷேத்திரங்களைச் சொல்லுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.பொதுவாக, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பார் பெருமாள். கிடந்த கோலத்தில் சேவை சாதிப்பார். இருந்த கோலத்திலும் நடந்த கோலத்திலுமாகக் காட்சி தருவார். இங்கே... திருநீர்மலை திவ்விய திருத்தலத்தில் நான்குவிதமாகவும் திருக்காட்சி தருகிறார் பெருமாள் என்பது இந்தத் தலத்தின் இன்னொரு மகத்துவம்.ஸ்ரீநீர்வண்ணப் பெருமாளாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். அதேபோல, ஸ்ரீசாந்த நரசிம்மராக இருந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். மாணிக்க சயனத்தில், ஸ்ரீரங்கநாதராக கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார். த்ரிவிக்கிரம பெருமாளாக நடந்த திருக்கோலத்தில் காட்சி தந்து அருளுகிறார்.இத்தனை பெருமைகளையும் ஒருங்கே பெற்ற திருத்தலமாக திகழ்கிறது திருநீர்மலை புண்ய க்ஷேத்திரம்.வாழ்வில் ஒருமுறையேனும் திருநீர்மலை திவ்விய க்ஷேத்திரத்துக்கு வந்து, நான்கு வித பெருமாளையும் கண்ணாரத் தரிசித்து வேண்டினால், நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். திருமண யோகம் விரைவில் கிடைக்கப் பெறலாம். கல்யாணத் தடைகள் மொத்தமும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.வால்மீகி முனிவருக்கும் தொண்டைமான் மன்னருக்கும் இங்கே திருக்காட்சி தந்து வரமருளிய திருத்தலம் எனும் பெருமைமிக்கது திருநீர்மலை. திருநீர்மலைக்கு வந்தால், திருப்பங்களும் நல்ல மாற்றங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
  • 1871
பழைமையான ஆலயங்களில் சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி அமைந்திருப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.அறுபத்து மூன்று சீடர்களோடு ஒரே இடத்தில் ஐக்கியமான தலமாக விளங்குவது, மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயமாகும்.இந்த அபூர்வ ஆலயத்தினை அறியும் முன்பாக அதன் நாயகரும், குருவுமான சீகாழி சிற்றம்பலநாடிகளைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகள்.தோற்றம்சோழ வளநாட்டில் அமைந்துள்ள சீர்காழியில், சைவ வேளாண் குடியில் தோன்றியவர் சீகாழி சிற்றம்பல நாடிகள். ஒழிவில் ஒடுக்கம் செய்தருளிய காழிக் கண்ணுடைய வள்ளல் இவரது உடன் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. இவரது காலம் பதினான்காம் நூற்றாண்டு ஆகும்.சிற்றம்பல நாடிகள் திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனைப் போற்றி வழிபட்டு, அருந்தவம் புரிந்தார். செந்தில் ஆண்டவனும் இவரது தவத்திற்கு இரங்கி, திருவருள் புரிந்து மெய்ஞானம் அளித்து அருளினார்.சிற்றம்பல நாடிகள் முருகனின் திருவருளைப் பெற்ற பின்பு மயிலாடுதுறையில் ஒரு மடாலயம் ஒன்றை அமைத்து அங்கேயே தங்கி தவமியற்றினார். தருமபுரம் ஆதீனத்து குருமுதல்வர் திருஞானசம்பந்தர் குருபரம்பரை முன்னோடிகளில் முதன்மையானவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்ஞான செல்வர்களாக விளங்கினர். இவரது சீடர்களாக அறுபத்துமூன்று பேர் இருந்தனர்.கசக்கும் நெய்ஒரு சமயம், சிற்றம்பல நாடிகள் தனது சீடர்களுடன் திருமடத்தில் உணவருந்துவதற்காக அமர்ந்தார். அவர்களுக்கு அன்னமும் பருப்பும் பரிமாறப்பட்டன. பரிமாறுபவர் தவறுதலாக நெய்க்குப் பதிலாக வேப்ப எண்ணெயை எடுத்துப் பரிமாறினார்.சிற்றம்பல நாடிகளும் அவரது சீடர்களும் எந்தவித வேறுபாடுமின்றி உணவருந்தினர்.ஆனால், கண்ணப்பர் என்ற ஒரு சீடர் மட்டும், அதன் கசப்புத் தன்மையை உணர்ந்தார். உடனே அதனை வெளிப்படுத்தினார். இதைக் கேட்ட சிற்றம்பல நாடிகள் நமது திருக்கூட்டத்தில் இன்னமும் பக்குவம் அடையாத சீடரும் இருக்கின்றார் போலும் என்று கூறினார்.உடனே தனது தவறை உணர்ந்த அந்த சீடர், திருக்கூட்டத்தை விட்டு வெளியேறினார்.தனது குருநாதருடைய திருவடியை தியானித்தவாறே வடக்கு நோக்கிச் சென்று, தவமியற்றி,வாழ்ந்து வந்தார்.சமாதி நிலை அடைய விருப்பம்இந்நிலையில், சிற்றம்பல நாடிகள் சமாதி நிலையை அடைய விரும்பினார். தனது சீடர்களிடம் தமது விருப்பத்தை எடுத்துக் கூறினார். சீடர்கள் அனைவருமே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதன் பின்பு சோழ மன்னனை அழைத்து, அம்மன்னனிடம், “யாம் திருக் கூட்டத்தோடு சித்திரைத் திங்கள் திருவோண நட்சத்திர நாளில் ஜீவசமாதி எனும் நிஷ்டையில் சமாதி கூட விரும்புகின்றோம். அதற்கு தக்க இடம் அமைத்து தருக”, என்று ஆணையிட்டார்.இதைக் கேட்ட மன்னன், இன்னும் பலகாலம் தாங்கள் இப்புவியில் வாழ வேண்டும் என வேண்டி நின்றான். ஆனால், சிற்றம்பல நாடிகள், தமது முடிவில் தீர்க்கமாக இருந்தார்.இதனால் சோழ மன்னன் மறுப்பு ஏதும் கூறாமல், சிற்றம்பல நாடிகளின் விருப்பப்படியே நடந்தான்.இதற்கு உரிய இடமாக மயிலாடுதுறைக்கு மேற்கேயுள்ள காவிரிக்கரை சோலை ஒன்றில், அறுபத்து மூன்று சமாதிக் கோயில்கள் அமைத்து,அதனைச் சிற்றம்பல நாடிகளிடம் தெரிவித்தான்.அதே போல இச்செய்தியை நாடெங்கும் பறையறைந்தும் தெரிவிக்கப் பட்டது.இந்த அதிசயத்தைக் காண அன்பர்கள் பலரும் அங்கே கூடி நின்றனர்.தான் குறித்த நாளில் சிற்றம்பல நாடிகள் தன் அடியவர் கூட்டத்தோடு அச்சோலைக்கு எழுந்தருளினார்.அங்கிருந்த அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார். அனைவரும் கேட்கும் வகையில்,மூன்று திருவெண்பாக்கள் பாடினார். தனக்கென்று அமைத்த சமாதியில் இறங்கி,சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி, மோன நிலையில் வீற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சீடர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கிச் சித்தி பெற்றனர்.சீடர் கண்ணப்பர்அப்போது வடக்கு நோக்கிச் சென்ற கண்ணப்பர் என்ற சீடர், இச்செய்தி அறிந்து அங்கு ஓடோடி வந்தார். சமாதிகள் அனைத்தையும் வணங்கினார். முடிவில், தனது குருநாதர் சிற்றம்பல நாடிகள் சமாதி முன்பு வணங்கி,“ ஆண்ட குருசிற்றம் பலவா அடியேற்காமீண்டும் எழுந்தருள வேண்டாவோ-நீண்டவனும்ஆரணனும் காணாத ஆனந்த வாரிதியில்பூரணமா வையாத போது ”,என்று மனமுருகிப் பாடினார்.அப்போது சிற்றம்பல நாடிகளின் சமாதி பெருத்த ஓசையுடன் வெடித்தது. தம்மை வணங்கி நின்ற தன் சீடர் கண்ணப்பரை தம் இருகைகளாலும் தழுவி, தம் மடியில் ஒன்றுபடுத்திக் கொண்டு, மீண்டும் சமாதியில் அமர்ந்தார். இந்த இடம் தற்போது சித்தர்காடு என்ற பெயருடன் விளங்குகின்றது.இத்தலமே தற்போது சீகாழி சிற்றம்பலநாதர் திருக்கோயிலாக அருள் வழங்கி வருகின்றது.தரிசன நேரம்காலை 7.00 மணி முதல் நண்பகல்12.00 மணி வரையிலும்,மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.அமைவிடம்நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை இரயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை இரயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும், சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.நம்பிக்கையோடு தன் தலம் நாடி வருவோருக்கு வினைகள் அனைத்தையும் நீக்கி அன்று போல் இன்றும் அருள் புரிந்து வருகின்றார். அதேபோல, முறையாக தரிசித்து வணங்கும் எல்லோருக்கும் அவரவர் வேண்டும் வரங்களை வழங்கி வருகின்றார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
  • 2028
*கணவன் மனைவிக்குள் பிரிவே வரக்கூடாது என்றால், ஞாயிற்றுக்கிழமை இந்த 1 பொருளை வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஆயுள் முழுவதும் உங்களுக்குள் பிரிவே வராது.*இன்றைய காலகட்டத்தில் கல்யாண வாழ்க்கையும், கணவரோடு வாழும் வாழ்க்கையும் ஒரு சிலருக்கு நரகமாக இருக்கிறது. வாழ்க்கை என்றாலே சந்தோஷமாக வாழத்தான். இந்த வாழ்வு ஒருமுறைதான். 24 மணி நேரத்தில் பாதி நேரம் தூக்கத்திலேயே கழிகின்றது. மீதி இருக்கும் நேரத்தில் வேலை செய்ய முக்கால்வாசி நேரம் கழிகிறது. மீதி இருக்கும் நேரத்திலாவது நம்முடைய வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வேண்டாமா.உங்களுடைய வீட்டில் கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் முகத்தைக் கூட பார்த்துக் கொள்ள பிடிக்காமல் இருந்தால், இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் உங்களுக்காகத்தான். இதோடு சேர்த்து பெண்கள் தங்கள் மாங்கல்ய விஷயத்தில் செய்யக்கூடாத ஆன்மீகம் சார்ந்த சின்ன சின்ன தவறுகளை பற்றியும் பார்த்து விடுவோம்.கணவன் மனைவி ஒற்றுமைக்கு பரிகாரம்கணவன் மனைவி ஒற்றுமை என்றால் முதலில் இருக்கக் கூடிய விஷயம் திருமாங்கல்யம். தாலி கட்டிய பிறகுதான் இந்த உறவு தொடங்குகிறது. இந்த தாலி கயிறு மாற்றும் போது பெண்கள் செய்யக்கூடிய ஒரு முக்கியமான தவறு இருக்கிறது. இந்த தவறை நீங்கள் இதுவரை செய்திருந்தால் இனிமேல் செய்யாதீங்க திருத்திக் கொள்ளுங்கள்.தாலி கயிறு மாற்றும் போது முதலில், கழுத்தில் மாங்கல்யத்தை போட்டுக்கொண்டே கத்தரிக்கோலை வைத்து அந்த கயிறை வெட்டவே கூடாது. கழுத்தில் இருக்கும் மாங்கல்ய கயிறு கழுத்தில் இருந்தபடியே வெட்டப்பட்டால், உங்களுக்கு மாங்கல்ய தோஷம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.புதுக்கயிறு கழுத்தில் மாட்டிக் கொண்டு, பழைய கயிறையோ, சரதையோ கழுத்திலிருந்து கழட்டி அதில் இருக்கும் கயிறை வெட்டி புது கயிறு கோர்த்து மீண்டும் உங்களுடைய கழுத்தில் மாட்டிக்கொள்ள வேண்டும். கூடுமானவரை மாங்கல்ய கயிறு மாற்றும் போது உங்கள் கணவர் உடன் இருக்கும்போது மாற்றிக்கொள்ளுங்கள்.உங்களது கணவரது கையால் மீண்டும் அந்த தாலி கயிறை உங்கள் கழுத்தில் போட்டுக் கொள்வது சிறந்தது. தாலி கயிறு மாற்றும் போது ராகு காலம் எமகண்டம் நேரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் காலை 6:00 மணிக்கு முன்பாகவே சூரிய உதயத்திற்கு முன்பு தாலி கயிறு பிரம்ம முகூர்த்த நேரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.சரிங்க கணவன் மனைவிக்குள் பிரிவு வரக்கூடாது என்றால் ஞாயிற்றுக்கிழமை என்ன பொருளை வாங்கணும். மல்லிகை பூ தான். இரவு 8 மணிக்கு முன்பாக எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் ஞாயிற்றுக்கிழமை மல்லிகை பூ வாங்கி மனைவிக்கு, கணவன் கொடுக்க வேண்டும். மல்லிகைப்பூ என்பது சுக்கிரன். அங்கு மகாலட்சுமியின் மனம் மகிழ இந்த மல்லிகைப் பூவின் வாசம் நமக்கு உதவி செய்கிறது. நம் வீட்டு மகாலட்சுமி நம்முடைய மனைவிதான்.அவளுடைய மனதை குளிர வைப்பதற்கு 50 ரூபாய்க்கு வாங்கும் மல்லிகை பூ போதுமானது. இதில் சுக்கிர வசியமும் அடங்கி இருக்கிறது. இதை எந்த தவறான நோக்கத்துடனும் சொல்லவில்லை. கணவன், மனைவிக்கு மல்லிகை பூ வாங்கி கொடுக்க வேண்டும், மனைவி கணவருக்கு எது விருப்பமோ அதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கணவருடைய மனம் நோகாமல் மனைவி நடந்து கொள்ள வேண்டும்.நீ இல்லை என்றால் நானும் இல்லை என்ற முடிவுக்கு இருவரும் வரவேண்டும். அடிமையாக இருக்கச் சொல்லவில்லை எல்லாம் என் கணவர் தான் என்று மனைவி இருந்தால், கணவர் எல்லாம் என் மனைவி தான் என்று இருக்க தொடங்கி விடுவார். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்றால் மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரம் ஒன்றே போதும். யார் குடும்பத்திலும் விவாகரத்து என்ற வார்த்தை வரவே வராது நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம்.
  • 2037
எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் . இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள "பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது.பல்லவர், பாணர், சோழர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பழமையானது நந்திவர்மன் காலத்து கல்வெட்டு.லிங்கம் 5 அடி உயரம். தடிமன் 1 அடி. லிங்கத்தின் தண்டு பகுதி 4 அடி. நுனியில் உள்ள மொட்டு 1 அடி. தண்டுப் பகுதியில் ஓர் வேடன் உருவம் வலது கையில் ஆட்டை தொங்கவிட்டும், மறு கையில் சிறு பாத்திரமும், தோளில் வேட்டை கோடரி (பரசு) யும் வைத்துள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது.மார்பில் பூணூல் இல்லை. ஜடாமுடி தரித்துள்ளது. லிங்கத்தின் கீழ் யோனி பீடம் (ஆவுடை) காணப்படவில்லை.எனவே அக்காலத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்தது போல தமிழ்நாட்டிலும் (இந்தியாவின் பிற பகுதிகளிலும்) " இக்கோவில் கலை காணப்படுகிறது.பழமையான சிவலிங்கம் :-உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் 'ஹரப்பா' வில் உள்ளது.அதற்கு அடுத்த பழமையான சிவலிங்கங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. 'குடிமல்லம்' என்ற இடத்தில் உள்ள சிவலிங்கம்.பழைய எல்லைப்படி இது தமிழகம். இன்றைய எல்லைப்படி இது ஆந்திரா. ஆம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள ஊர்.இந்த குடிமல்லம் சிவன் கோயில் ASI (Archaeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது.உலகில் சிவலிங்கத்தை ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்துப்படி இதுவே மிகவும் பழமையான சிவலிங்கம்.ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம்.மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவலிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தை காண வருகின்றனர்.உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும்.இத்தனை முக்கியமான சிவன் கோயிலுக்கு மக்கள் வருவதே இல்லை. ஆனால் ரேணிகுண்டாவை தாண்டித்தான் லட்சக்கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர்.அப்படி என்ன இந்த சிவ லிங்கத்தில் உள்ளது என்பது என்பதை காண ஆன்மீகவாதிகள் சென்று முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு முறையாவது அந்த சிவலிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.
  • 2042
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி  மேஷம் -ராசி: அலுவல் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை ரிஷபம் ராசி: வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நட்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பிங்க் மிதுனம் -ராசி: எதிர்கால சேமிப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வித்தியாசமான அனுபவங்களால் புரிதல் உண்டாகும். பணியில் மாற்றமான சூழல் அமையும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வர்த்தக வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படவும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். சுபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கடகம் -ராசி: குடும்பத்தில் புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அரசு காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை சிம்மம் -ராசி:எண்ணிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இசை சார்ந்த துறைகளில் அனுபவம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும். பரிசு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு கன்னி -ராசி: தடைபட்ட வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வியாபாரப் பணிகளில் மதிப்பு மேம்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். மனதில் இருக்கும் தனிப்பட்ட ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். முக்கியமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் துலாம் -ராசி: கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். விரும்பிய விஷயங்களை அடைவதற்கான சூழல் அமையும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். கம்பீரமான பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெண்மை விருச்சிகம்- ராசி: குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளி வட்டாரங்களில் அலைச்சல் மேம்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களால் சில மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்புக்கு உண்டான லாபம் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய முதலீடுகளில் விவேகம் வேண்டும். ஓய்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் தனுசு -ராசி: மனதளவில் புதிய தேடல் பிறக்கும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : நீலம் மகரம் -ராசி:வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அணுகு முறையில் சில மாற்றங்கள் உண்டாகும். பேச்சு வன்மையால் அனுகூலம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். பணிபுரியும் இடத்தில் ஒற்றுமை மேம்படும். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கும்பம் –ராசி:புதிய முயற்சிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விருப்பமான விஷயங்களை தைரியமாக செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வியாபாரத்தில் ஆதாயமான சூழல் அமையும். சலனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் மீனம் -ராசி: எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். திட்டமிட்ட சில காரியங்களில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 2315
ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 4.10.2024.சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.இன்று அதிகாலை 02.38 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று மாலை 06.48 வரை சித்திரை. பின்னர் சுவாதி. பூரட்டாதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 2306
பெருமாள் பக்தர் ஒருவர் அதிகாலை நீராடி, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி பெருமாளைத் தரிசிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார்.ஒரு குருவிடம் சென்று, ""குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு குறையில்லை. இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன்'' என்றார்.குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து,""தம்பி! உன் குடும்பம் நலமா? ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா?'' என்று கேட்டார்.அந்த நபரோ, ""பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை...?''என்றார்.உடனே பெருமாள் பக்தர் ஆச்சரியத்துடன், ""எனக்கு அந்த மந்திரம் தெரியாதே! அதைச் சொல்லேன்!'' என்றார்.வந்தவர்,""கோவிந்தா! கோவிந்தா!'' என்றார்.பக்திமான் ஏமாற்றத்துடன்,""இது தானா! நான் தினமும் விஷ்ணு சகஸ்ரநாமமமே சொல்கிறேன். அதை விடவா இது பெரிது?'' என்றார்.குரு அவரிடம்,""நீ தவறாக நினைக்கிறாய். ஆயிரம் பெயர்களால் விஷ்ணுவை வணங்குவதே சகஸ்ரநாமம். இது பீஷ்மர் அர்ஜூனனுக்கு உபதேசித்தது. இதைப் போல அற்புதம் வேறில்லை. ஆனால், எல்லாரும் பீஷ்மராக முடியுமா?பாமரனும், பெருமாள் அருள் பெற சொல்லப்பட்டதே கோவிந்த நாமம்.திரௌபதியின் மானம் காத்தது அதுவே. எந்த மந்திரமும் அறியாதவன் கூட "கோவிந்தா' என்று உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்'' என்றார் குரு.பக்தரின் மனதில் தெளிவு பிறந்தது.
  • 2477
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்றஉத்தமர்தம் உறவு வேண்டும்உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மைபேசா திருக்க வேண்டும்பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்பிடியா திருக்க வேண்டும்மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனைமறவா திருக்க வேண்டும்மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்றவாழ்வுனான் வாழ வேண்டும்தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்தலமோங்கு கந்த வேளேதண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணிசண்முகத் தெய்வ மணியே.விளக்கம்:ஒவ்வொரு சமயமும் கடவுளை வேறு வேறு தேவைகளுக்காக நினைக்கிறோம். நமக்கோ, நமக்கு வேண்டியவர்களின் உடல் நலம் வேண்டி, பணம் வேண்டி, பிரச்சனை தீர வேண்டி, பிள்ளைகளுக்கு நல்ல வேலை வேண்டி, நல்ல வரன் வேண்டி இப்படி பலப் பல காரணங்களுக்காக இறைவனை நினைகின்றோம்.அது பக்தி அல்ல. 'ஒருமையுடன்' ஒரே சிந்தனையுடன் அவனது மலரடி நினைப்பவர் உறவு வேண்டும். வாயொன்று சொல்லும், மனம் ஒன்று நினைக்கும் மனிதர்கள் தான் இங்கு அதிகம். உள்ளும் புறமும் வேறாய் இருக்கும் வஞ்சகர்கள் அவர்களாக வந்து நம்மோடு கலந்து விடுவார்கள். நாம் அவர்களை தேடி போவது இல்லை.நாம் அறியாமல் நடப்பது. எனவே, வள்ளலார், அது போன்ற மனிதர்களின் உறவு கலவாமை வேண்டும் என்று வேண்டுகிறார். இறைவனின் பெயரை சொல்லிக்கொண்டே கொள்ளை அடிப்போர் உண்டு. எனவே, உன் புகழையும் பேசவேண்டும், பொய் பேசாமல் இருக்க வேண்டும் என்று இரண்டையும் வேண்டுகிறார். மனிதனுக்கு மதம் பிடிக்காமல் இருக்க வேண்டும். இறைவனின் பெயரால், மதத்தின் பெயரால், எத்தனை போர்கள், எத்தனை உயிர் பலி...அதை கண்டு வருந்தி "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்று வேண்டுகிறார்கட்டி அணைக்கும் பெண் ஆசையை மறக்க வேண்டும் என்கிறார். ஞாபகம் இருந்தால் மீண்டும் வேண்டும் என்று தோன்றும். மறந்து விட வேண்டும். எப்போதும் இறைவனை மறவாது இருக்க வேண்டும்.நல்ல புத்தி வேண்டும். நல்ல புத்தி இருந்தாலும் அது தவறான வழியில் செல்லாமல் இருக்க இறைவனின் அருள் வேண்டும். நோயற்ற வாழ்வு வேண்டும். சென்னையில் உறையும் கந்தவேளே !குளிர்ந்த (தண்) முகத்தை உடைய, தூய்மையான மணிகளில் சிறந்த மணியான சைவ மணியே, சண்முகத் தெய்வ மணியே எனக்கு நீ இதை எல்லாம் அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.- வள்ளலார்.
  • 720
இஸ்ரேல் மீது ஈரானிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களை கனடிய அரசாங்கம் கண்டித்துள்ளது. ஈரான் படையினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி இருந்தனர். சுமார் 200 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை கனடிய வெளி விவகார அமைச்சர் மெலனி ஜோலி வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறான தாக்குதல்கள் பிராந்திய வலயத்தின் ஸ்திரத்தன்மையை மேலும் சீர்குலைக்கும் என அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இவ்வாறான தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த ஈரானிய ஏவுகணை தாக்குதல் பிராந்திய வலயத்தில் பாரிய போரை உருவாக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.இஸ்ரேலிய அரசாங்கம் நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு என கனடா தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வு எட்ட முடியும் என கருதுவதாக கனடிய வெளி விவகார அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சரும் தெரிவித்துள்ளனர். 
  • 727
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளது. விக்டோரியாவிற்கு தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறு தீவு ஒன்றில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 4ம் திகதி வரையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.இந்த பயிற்சி நடவடிக்கைகளின் போது வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய தேசிய பாதுகாப்பு திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாள்தோறும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
  • 1583
நினைத்தது நிறைவேற செவ்வாய்கிழமை வழிபாடு. செவ்வாய்கிழமையில் முருகப் பெருமானை வேண்டி எந்த வழிபாடு, விரதம் ஆகியவற்றை மேற்கொண்டாலும் அது பல மடங்கு அதிகமான பலனை தரும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் அது நிச்சயம் பலன் தரும்.செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வழிபாடு, பைரவர் வழிபாட்டிற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவானுக்கு உரிமையான நாள் என்பதாலேயே செவ்வாய்க்கிழமை என குறிப்பிடுகிறோம். முருகுப் பெருமானுக்கு திதி, நட்சத்திரம், கிழமை என மூன்று விதமான விரதங்கள் கடைபிடிக்கப்படுக்கின்றன. செவ்வாய் பகவானுக்குரிய அதிதேவதை முருகப் பெருமான் என்பதால் செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றதாக சொல்லப்படுகிறது. திதி அடிப்படையில் விரதம் இருந்தால் 15 நாட்களும், நட்சத்திர அடிப்படையில் விரதம் இருந்தாலும் மீண்டும் அந்த நட்சத்திரம் வருவதற்கு ஒரு மாதமும் காத்திருக்க வேண்டும். ஆனால் கிழமை அடிப்படையில் விரதம் இருப்பது குறுகிய கால விரதம் என்றாலும், மிக விரைவாக பலன் தரக் கூடியதாகும். செவ்வாய் பகவான், வீடு, நிலம், சொத்து ஆகியவற்றிற்கு காரணமான கிரகம் என்பது அனைவருக்கும் தெரியும். செவ்வாய் பகவானை வழிபட்டால் வீடு, வாகன யோகம் அமையும்.மனித உடலில் முகம், ரத்தம், சுரப்பிகள், கல்லீரல், இடது காது, எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் ஆகியவற்றிற்கு செவ்வாய் பகவான் தான் காரணமானவராக இருக்கிறார். இதனால் செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து, அவருக்குரிய அதி தேவதையான முருகப் பெருமானை வழிபடுவதால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் அனைத்தும் குறையும். அதோடு சில குறிப்பிட்ட வழிபாடுகளை செவ்வாய் கிழமையில் வரும் செவ்வாய் ஓரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான காலத்தில் செய்யும் போது அதற்கு விரைவான பலன் கிடைக்கும். என்ன நினைத்து இந்த வழிபாட்டினை செய்கிறோமோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். அதோடு வாழ்க்கையில் ஏற்றம் என்பது இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையை மாற்றும் சிறப்பான வழிபாடு என்று கூட இதை சொல்லலாம். செவ்வாய்க்கிழமையில் காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பிறகு ஒரு தட்டினை எடுத்துக் கொள்ளுங்கள். எவர்சில்வர், பிளாஸ்டிக் இல்லாத மற்ற உலோகங்களால் ஆன தட்டுக்களை பயன்படுத்துவது சிறப்பு. அதன் மத்தியில் மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்துக் கொள்ளுங்கள். 6 என்ற எண்ணிக்கையில் வெற்றிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றின் காம்பு பகுதியை கிள்ளி எடுத்து விடுங்கள். வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம் என்றாலும், அதன் காம்பு பகுதியில் மூதேவி வசிப்பதாக ஐதீகம். அதனால் அதனை அகற்றி விட்டு, ஆறு வெற்றிலைகளின் மேல், நடு, நுனி பகுதியில் மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த வெற்றிலைகளை விசிறி போல் தட்டில் பரப்பி வையுங்கள்.ஆறு வெற்றிலைகளின் நுனி பகுதியும் வெளிபுறமாக இருப்பது போலவும், அடிப்பகுதி உட்புறமாக இருப்பது போலவும், அந்த வெற்றிலைகள் ஒன்றின் மீது ஒன்று படும் வகையிலும் வைக்க வேண்டும். அந்த ஆறு வெற்றிலைகளிலும் பூ வைத்து, மத்தியில் ஒரு அகல் விளக்கினை ஏற்றி வையுங்கள். நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி, அந்த விளக்கில் கிள்ளி வைத்த வெற்றிலை காம்புகளை போட்டு, விளக்கு ஏற்ற வேண்டும். ஆறு வெற்றிலைகளிலும் படும் வகையில் விளக்கை வைத்து ஏற்ற வேண்டும். பிறகு முருகப் பெருமானை மனதார நினைத்து, உங்களின் வேண்டுதலை சொல்லி முறையிடுங்கள். இந்த விளக்கு அரை மணி நேரமாவது பூஜை அறையில் எரிய வேண்டும். வெற்றிலை தீபம் மட்டுமின்றி செவ்வாய்கிழமையில் வீட்டின் பூஜை அறையில் கோலமிட்டு, அதன் மீது ஆறு நெய் விளக்குகள் ஏற்றியும் வழிபடலாம். இப்படி ஏற்றுவதால் அந்த ஆறு விளக்குகளிலும் முருகப் பெருமானின் ஆறுமுகங்களும் எழுந்தருளி, நமக்கு அருள் செய்யும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு நைவேத்தியமாக இரண்டு வாழைப்பழங்கள் அல்லது சர்க்கரை கலந்த பால் என எது வேண்டுமானாலும் வைக்கலாம். இந்த இரண்டில் ஏதாவது ஒரு வழிபாட்டினை செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஓரையில் தொடர்ந்து 6 வாரங்கள் செய்து வர வேண்டும். ஆறு வாரங்களில் இந்த வழிபாடு நிறைவு செய்வதற்குள், உங்களின் வேண்டுதல் நிறைவேற துவங்கி விடும்.
  • 1529