TamilPoonga

 • 1006
Added a post 
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.  டெல்லி அணி 18.2 ஓவரில் 198 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. டெல்லி அணி பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 • 89
 • 92
Added joke 
கடி ஜோக்ஸ்
 • 95
Added news 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்து வீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து கூடுதல் தகவலை மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
 • 96
Added news 
சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்து வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கக்கூடும் எனப் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.வடக்கு மாகாணம், மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் தொற்று பரவல் வேகமடையலாம் என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், குருநாகல் மாவட்டத்தில் தித்தவேல்கல கிராமத்தில் 29 கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து அந்தக் கிராமம் நேற்று முதல் முற்றாக முடக்கப்பட்டது என அப்பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அறிவித்துள்ளார்.இந்தக் கிராமத்தில் சுமார் 540 குடும்பங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர் மேலும் கூறியுள்ளார்.
 • 100
Added news 
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.19 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 1.84 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.07 லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 • 98
Added news 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா பரவல் 1.6 சதவீதமாக இருந்தது. ஒரே மாதத்தில் 8 சதவீதம் உயர்ந்து கொரோனா பரவல் 9.6 சதவீதம் ஆனது. சென்னையை பொறுத்தமட்டில் கொரோனா பரவல் 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த 20-ம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 • 98
பெண்களின் வயது அவா்களின் கால் அணிகலன்கள்0−12 வயது(பேதை) கால் காப்பு12−24 வயது(பெதும்பை) நூபுரம்−கல்வளை24−36 வயது (மங்கை) கொலுசு36−48 வயது (மடந்தை) சிலம்பு48−60 வயது (அரிவை) தண்டை60−72 வயது (தெரிவை) காலாழி72 க்கு மேல் (அவ்வை) கழல் கடகம்
 • 162
 • 161
Added a memorial 
திடீர் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் நேற்று காலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார். இன்று (17 April 2021)அதிகாலை 4.30 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதற்கு முன் தினம் தான் அவர் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தார்.
 • 285
வெள்ளிக்கிழமை காலை வணக்கம்
 • 192
Added news 
                                       விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தி்ல் துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரியவருகிறது.ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலேயே இருவர் காயமடைந்துள்ளனர் என பாதுகாப்பு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.                                    
 • 176
RR won the match
 • 175
Delhi Capitals 147/8
 • 263
 • 263