வடமராட்சி

  •  ·  Administrator
  • 1 members
  • 1335 views
இன்று வல்வெட்டி துறை மாவீரர் துயில் இல்லத்தில் பெரும் திரளான பெற்றோர்கள் மாவீரர்களுக்கு ஈகைச் சுடரேற்றி கண்ணீர் மல்க அஞ்சலியைச் செலுத்தினார்கள்.
+1
  • 931
சந்தேக நபர்களுக்கு எதிராக 40இற்கும் மேற்பட்ட பிடியாணைகள் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 60இற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையிலும் பொலிஸாரால் சந்தேக நபர்களைக் கைது செய்ய முடியாதிருந்தது.இந்தநிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபர்களை நேற்று கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்ஸிஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்கள் பிரதீப், மேனன் மற்றும் கொன்ஸ்டாபிள்களான கவியரசன், புவனச்சந்திரன், சுயந்தன், சம்பத், அரஹம், அசாத், யோசப், பிரவீன், கரன், பெண் பொலிஸ் கொன்ஸ்டாபிள் வர்ணகுலசூரிய ஆகியோரைக் கொண்ட குழுவே சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது.அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் வயோதிபர்களை இலக்கு வைத்து கத்தி முனையில் அச்சுறுத்திச் சங்கிலி அறுக்கும் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை. அதையடுத்து யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.விசாரணைகளின் அடிப்படையில் 42 மற்றும் 43 வயதான சந்தேக நபர்கள் இருவர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். நாவற்குழி மற்றும் அல்வாயைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.முதன்மை சந்கேக நபரான சின்னவன் என்பவர் மீது 15 திகதியிடப்படாத பிடியாணைகளும், 8 பிடியாணைகளும் மற்றைய சந்தேக நபரான ஜெயா என்பவர் மீது 5 திகதியிடப்படாத பிடியாணைகளும், பருத்தித்துறை நீதிமன்றில் 10 பிடியாணைகளும், மேல் நீதிமன்றில் ஒரு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.சந்தேக நபர்களிடம் இருந்து கோப்பாய் பகுதியில் வழிப்பறிக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும், நெல்லியடியில் திருடப்பட்டு வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கோப்பாய், நெல்லியடி, கொடிகாமம் ஆகிய இடங்களில் வழிபறி செய்யப்பட்டது என்று நம்பப்படும் 3 சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டன.அதேநேரம், சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் நுட்பமான முறையில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி, வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், கடந்த 3 மாதங்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடந்த வழிப்பறிக் கொள்ளைகளுடன் இவர்களுக்குத் தொடர்பு உண்டு என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
  • 1158
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாவத்தை பகுதியில் 21 பவுண் தங்க நகைகளை வீட்டில் யாருமில்லாத பகல் வேளை (21)ம் திகதி திருடப்பட்டதாக பொலிசாருக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய உடுப்பிட்டி நாவலடியைச்சேர்ந்த 25 வயதுடைய சந்தேகபரையும் களவாடப்பட்ட 35 லட்சம் பெறுமதியான தங்க நகைகளையும் வல்வெட்டித்துறை பொலிசார் மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
  • 1170
  • 816
வவுனியா கனகராயன் குளம் பகுதியில் வியாழன் காலை யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்து டிப்பருடன் மோதி விபத்து!
+1
  • 941
நெல்லியடி பஸ் நிலையத்தில் காணப்படுகின்ற மலசலக்குளி நிரம்பி வழிகின்றது.21.11.2022இன்று காலை போக்குவரத்துக்காக பஸ் நிலையத்துக்கு வந்து நின்ற பயணிகள் சுகாதார சீர்கேட்டினால் நிற்க முடியாமல்  வேறு  இடங்களில்  நின்று போக்குவரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.அருகில் உள்ள உணவகங்கள் உட்பட வர்த்தக நிலையங்கள் துர்நாற்றத்தினால்  இயங்க முடியாமல் கடைகள் பூட்டப்பட்டன.  இது சமூக அக்கறை கொண்ட பொது அமைப்புகள் இன்று காலை நெல்லியடி    பொலிநிலையத்தில் பருத்தித் துறை போக்குவரத்து சபைக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்கள்.இது தொடர்பாக  வடமராட்சி தெற்கு தெற்கு பிரதேச சபை செயலாளர் அவர்களுக்கும் உடனடியாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.உடனடியாக பொதுமக்களின் நன்மை கருதி சுகாதாரத்தினை கருத்தில் கொண்டு கழிவு அகற்றுவதற்கான நடவடிக்கையை போக்குவரத்து சபைக்கு உரிய இடமானபடியால் அவர்கள் தான் கழிவு அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் செயலாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.
  • 1169
அச்சுவேலி வல்லை கடல் நீர் ஏரியில் மீன் பிடிக்க சென்ற போது நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞன் புதன் கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் லக்சன் என்ற வயது , என்ற 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக கடற்படை சுழியோடிகளினால் மீட்கப்பட்டுள்ளார்.
  • 577
செவ்வாய்க்கிழமை மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து
  • 565
அண்மையில் கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருப்பதாக வியட்னாம் தூதுவராலயம் சார்பாக குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பொருளாதார சூழல் காரணமாக புலம் பெயர முயற்சித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.இவருக்கு பிறந்து ஆறு மாதங்களே ஆன பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர வழியறியாது குடும்பத்தினர் தவித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
  • 869
  • 919
மாங்குளம் பகுதியில் சற்று முன் சொகுசு வானுடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்துமோட்டார் சைக்கிளில் வந்தவர் உயிர் இழந்துள்ளார்இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்...!
  • 897
காங்கேசன் துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்தர் மூன்று குழுக்களாக வழி நடத்தலின் கீழ் நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர தலமையில் உப பொலிஸ் பரிசோதகர் றட்ணாயக்க மற்றும் புலணாய்வுத்துறை வழிகாட்டலில் 17.11.2022  வியாழக்கிழமை மோப்ப நாயின் உதவியுடன் கரணவாய் பகுதியில் இளஞர் ஒருவரிடம் 100.கிராம் கஞ்சாவும் துன்னாலை கிராமசேவையாளர் பிரிவில் உள்ள கிராமத்தில் 100ML கரோயின் போதைப் பொருளுடன் இருவரை மேப்பநாயின் உதவியுடன் பிடிபட்டு விசாரணையின் பின் பருத்தித்துறை நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்கள்.
+15
  • 1234
வடமராட்சி வயல்கள்
+2
  • 1340
வடமராட்சி பூதேஸ்வரர் சிவன் கோயிலில் இரு கிழமைக்கு முன்னர் உணவு சமைக்கும் பாத்திரங்கள் உட்பட பல களவாடப்பட்டுள்ளன.இந்நிலையில் நெல்லியடி பொலீஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர பணிப்பின் பேரில் உப பொலீஸ் அத்தியட்சகர் ரட்ணாயக்க குழுவினர் மேகொண்ட தேடுதலில் துன்னாலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
  • 866
புனர்நிர்மாண பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் வீதிகளின் பள்ளங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.இந்த பாதையால் செல்லும் மக்கள் பலத்த சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.குறிப்பாக கரவெட்டியிலிருந்து யா/விக்னேஸ்வரா கல்லூரி,யா/நெல்லியடி மத்திய மகா வித்தியாலயாலயம் ,யா/வட இந்து மகளிர் கல்லூரி போன்றவற்றுக்கு செல்லும் மாணவர்கள் இந்த பாதையாலேயே செல்லவேண்டியுள்ளது.அத்தோடு அம்பம் வைத்திய சாலைக்கு செல்லும் நோயாளர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் இந்த பாதையையே பாவிக்க வேண்டியுள்ளது.ஆகவே விரைவாக இந்த வீதியை உரிய தரப்பினர் செப்பனிட்டு தர வேண்டும் என்பது இந்தப் பிரதேச மக்களின் கோரிக்கை.
  • 820