கணவன் மறைந்து விட
கண்ணீர் அவளை
மணந்துக் கொண்டது
எத்தனை துன்பங்கள்
அவளுக்கு
மாலையாய் விழுந்தது
சமூகத்தின் புறக்கணிப்பு
சத்தம் இல்லாமல்
அவளது குறவளையை
நசித்துக் கொண்டிருந்தது
சோகங்கள் சொந்தமாய்
உறவாட
வறுமை
கோரத் தாண்டவம் ஆடியது
சகுனம் பார்ப்பவர்கள்
மனதை
காயப்படுத்திக் கொண்டே
இருந்தார்கள்
எத்தனை பழி சொற்கள்
அவளுக்கு
வலி கொடுக்கிறது
அதை போக்க
வழி கூட இல்லாமல்
தவித்துக் கொண்டிருக்கிறாள்
இந்த போராட்ட வாழ்க்கை
போதும் என்றாகி விட்டது
உடைந்து விழுந்த
ஒரு பூவைப் போல
தினமும்
நசுக்கப் பட்டு
விழி ஓரமாய்
கண்ணீர் கோடுகளுடன்
கழிகிறது காலம்
வைரஸ்
வருகை
எத்தனை மிகை..
அப்பா மகள்
உறவைப் பாட
அகராதியில்
வார்த்தைகளில்லை.
ஆசைப்பட்டு
கேட்டதெல்லாம்
அந்தக் கணமே
அடுக்கி வைப்பாரு.
சொந்தக் காலில்
நின்றிடவே
தோட்டம் கொத்தி
வாழ்ந்தாரு.
நீ பிறந்த
மண்ணில்
நானும்
பிறந்தேன்
ஒன்றாக
படித்தேன்
என்னையும்..என்
தமிழையும்
நீ ஏன்
வெறுக்கிறாய்?
புறக்கணிக்கிறாய்?
உன் மொழியை..நான்
மதிக்கிறேன்
பேசுகிறேன்
நீ ஏன்
பேசவும்
மதிக்கவும்
முடியாமல்
வெறுக்கிறாய்?
ஆன்மீகம்
சொல்லித்தந்த
அன்பு,கருணை,இரக்கம்
உனக்கில்லையா?
எனக்குண்டே!
பெரும்பான்மை
இனத்துக்கு
பெருந்தன்மை
வேண்டும்
உன் கரங்கள்
என்னைத்தொட
வேண்டும்
நீயும் நானும்
சகோதரரே
சமத்துவம்
வேண்டுமே!
பலத்தோடு
இருக்கிறாய்
புதைத்த
பிணத்தை
புரட்டிப்பார்க்கிறாய்
மூடிய கல்லறையை
இடித்து தகர்க்கிறாய்
இத்தனை பீதியா?
உனக்கு
பயப்படாதே..வா
கைகோர்ப்போம்
சமாதானம்
செய்வோம்...
இறந்தோரை
கல்லறையில்
தூங்கவிடு
இறந்தோர்
தூபிகளை
வணங்கவிடு
இத்தனை
வர்மமா
உனக்கு
தர்மமே
போதித்த
புத்தரும்
நானும்
கண்ணீர்
வடிக்கிறோம்
நீயும் நானும்
இறப்பது நியதி
இதைவிட
ஏதுமுண்டோ
உண்மையான
செய்தி....
கருவில் சுமந்தாள் அன்னை
கருவிழியில் சுமக்கிறாய் நீயடி
என் உணர்வுகளுக்கு
உருவம் கொடுப்பவள் நீயடி
அன்பு ஊற்றெடுக்கும்
அருவி நீயடி
அதில் விழுந்து நீச்சலடிக்கும்
ஆசை தங்கை நானடி.
என் கனவுகளை
கவலைகளை மொழிபெயர்ப்பவளே
தொப்புள்க்கொடி தோழியடி நீ
துயரத்திலும்
தோள் கொடுப்பவள் நீயடி .
அணைக்க கைகள் இருந்தால்
அழுவதில் கூட சுகம் தான்
ஆத்மார்த்த அன்பு உனதடி
அதை உணர்கிறேன் தினமும் நானடி.
அன்றாடம் என்
அனுபவ பரிமாற்றம் உன்னோடு தானடி
அதனால் அழுக்குகள் இல்லை
என் மனதில் என்றால் உண்மை தானடி.
அத்திபூத்தாற் போல்
சில கோபங்களும்
உண்டாகும் தருணங்களிலேயே
மண்ணாக்கி விடுவாயடி
மனம் நொந்து
மன்னிப்பும் கேட்பாயடி .
புரிந்துணர்வின்
பொக்கிஷம் நீயடி
புன்னகைக்க கற்றுக் கொண்டேன்
உன்னால் நானடி .
எனக்காய் துடிக்கும்
இதயம் உனதடி
இன்னொரு தாய் தான்
நீயும் எனக்கடி .
என் விம்பத்தைக் காட்டும்
கண்ணாடி நீயடி
என் கண்களின் காயமெல்லாம்
கண்டுபிடிப்பாய் நீயடி.
வாழ விருப்பம் கொண்டேன்
உன்னால் தானடி
வலிகள் எல்லாம்
மறக்க வைத்தவளும் நீயடி .
மறுபிறப்பு ஒன்று
எடுத்து வந்தால் நீ
மகளாய் பிறக்க வேண்டுமடி
தாயாகி உன்னை
தாலாட்ட வேண்டும் நானடி.
சிறந்த வழிகாட்டி நீயடி
வாழ் நாள்வரை
சகியடி நீ எனக்கு
சகோதரியே!