கவிதை
Poems by - TamilPoonga
முகவரி தொலைக்கிறது

விடிந்தது முடிகிறது

பொழுது

மடிந்து புதைகிறது

கனவு

விடியலின் புலர்வில்

மடிந்து விழுகிறது

மகிழ்ச்சி மட்டுமே

ஏமாற்றங்களின்

கைக்குலுக்கள்கள்

நம்பிக்கை துரோகங்கள்

ஏமாற்றங்களின்

ஏர்பிடிப்புக்கள்

தினமும் சந்திக்கும்

சகோதரர்கள்

மாற்றங்கள் துரு

நாற்றங்களாய் வீசுகிறது

திட்டாங்கள்

சதி வலைகளை

பின்னுகிறது

அன்பானவர்கள்

அரக்கர்களாகி விட

அதிர்ச்சி கிடங்கில்

சவமாய் விழுகிறோம்

வாழும் எண்ணம்

வாடி விழ

லட்சியங்கள்

மூச்சைடைத்து

முகவரி தொலைக்கிறது


அன்பு

அன்பு...

பாசம்.....

பாசம்.....

தாய்


தாயே
உன் புன்னகையில்
உதிர்ந்தன
மனப்புண் காயங்கள்



உன் மடியில்
தூங்கிய
கனபொழுதுகள்
நினைவில் அழியாத
பொக்கிசங்கள்



சோறூட்டி பாலூட்டி
பசியாத்தி
தாலாட்டு பாடி
உறங்கவைத்த
என்னருமைத்தையே



உன் நினைவுகளில்
மூழ்கி கிடக்கிறது
இத்துப் போன
என் இதயம்


கல்லறை மீது.....

கல்லறை மீது.....

ஆதாரம்


ஒதுக்கி கொள்வதற்காகவும்
ஒதுங்கி கொள்வதற்காகவும்
காரணம் தேடுகிறார்கள்
சிலர்



பாசங்கள் அவர்களுக்கு
பாதம்
அப்பி வைத்த
சுவடுகள் மட்டுமே



தள்ளி போவதற்காய்
தடயம் தேடுபவர்கள்
கோபம் படுவதாயும்
பழி சொல்லி போவார்கள்



உலகம்
மனிதர்களை
மிருகங்களாய்
மாற்றிக் கொண்டிருக்கிறது



மனிதத்தை களவாடி
சவக்குழிக்குள்
புதைத்து விடுகிறது



பிழை பிடிப்பதில்
பிழைப்பு நடத்துப்பவர்கள்
மனதை
கொலை செய்து விடுகிறார்கள்



பாவப்பட்ட சிலர்
கோவப்பட்டு
அவர்களுக்கு
ஆதாரம்
கொடுத்து கொண்டிருக்கிறார்கள்


குண்டு மழை; அன்பு மழை

குண்டு மழை; அன்பு மழை

பழகி விடுகிறேன்

பழகி விடுகிறேன்

தோற்றுப் போனது!

யாருக்கும் தெரியாது

எனக்குள்

சமாதியாகிப் போன 

சந்தோஷங்கள்......



இடைவெளி

கூடிக் களித்த கொண்டாட்டங்கள் குலைந்து தான் போனதே....

கொஞ்சிப் பேசும் மழலையையும்

 "கொஞ்ச"ம் அச்சமாய் நகர்ந்து தான் போனதே....

மனிதனுக்கு மனிதனே எதிரியாய் நோக்கும் நிலை என்றுமே மாறாது போனதோ .....

முகத்தை மறைக்கும் முகமூடியோ புன்னகையையும் சேர்த்தே மறைத்து போனதே.....

எனக்கும் சமூகத்திற்கும் ஆன தொடர்புகளோ சங்கிலியில் அறுபட்ட கன்னியாய் "சமூக இடைவெளியாய் "..... 


கடல் அலைகள்......

கடல் அலைகள்...... 

  •  · 
  •  ·  beesiva


முப்பதுக்கு
மேல் முடி உதிர்கின்றது.
நாற்பதில்
பார்வை குறைகின்றது.
ஐம்பதுக்கு
மேல் பற்கள் ஈடாடுது.
அறுபதுக்கு
மேல் சொற்கள் வலுவிழக்கின்றது.



இப்படியே
உடம்போடு வந்ததெல்லாம்
சொல்லாமலே
மாற்றம் காண்கையில்
கூடிப் பிறந்ததுகளும்
கூடப்பழகியவரும்
வாழ்வோடு
நிலைக்கவா போகின்றனர்..



சூழ்நிலை
உடைந்த கண்ணாடி.
ஒழுங்கான முகத்தையும்
அவலட்சணமாக்கி
பிரதிபலிக்கும்.
குத்திக் காட்டும்
மனிதனுக்கும்
சுட்டிக் காட்டும்
மனிதனுக்கும் நடுவில்
நர்த்தனமாடாது
நாகரீக சிரிப்போடு
நகரந்து விடு..



சண்டைகள்
போட்டு பேசாமல்
இருந்தது அக்காலம்.
சண்டைகள்
வந்திடுமோ என பயந்து
பேசாமல் இருப்பது
இக்காலம்..
வானிலையை விடவும்
மனிதனின்
மனநிலை அதிகம்
மாறுது தற்காலம்..
இன்னும்
சொற்ப காலமே
மனமே அமைதியை
காத்திடு..
கூடிய மனக் குப்பைகளை
குளத்தடியை
கண்டதும் மரத்தடியோரம்
இறக்கிவிட்டேன்..
ஈரமான இதயங்கள்
பாரம் தாங்காதன்றோ
காரமான வார்த்தைகளை
கடுகளவும் ஏற்காதாம்.


25-36