தமிழ்பூங்காவில் சேர்ந்து உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள். ஒவ்வொரு பதிவிற்கும் புள்ளிகள் கிடைக்கும். உங்கள் புள்ளிகளைப் பயன்படுத்தி பரிசுகளைப் பெறுங்கள்.
Added a news
இந்தியாவுடனான பதற்றமான சூழலுக்கு மத்தியில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை இரவு பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்தது. இந்தச் சூழலில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் ஆசிம் முனீர் கைது செய்யப்பட்டார்.
Added a news
போர் பாதிப்புகளை காரணம் காட்டி பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF - International Monetary Fund) உதவிக் கேட்டிருந்த நிலையில், அதை ஏற்க வேண்டாம் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டுள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை அழித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய எல்லையில் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். தொடர்ந்து பாகிஸ்தான் நடத்த முயன்ற தாக்குதல்களை இந்தியா முறியடித்தது.முன்னதாக பாகிஸ்தான் பொருளாதார வீழ்ச்சியில் உள்ளதை கருத்தில் கொண்டு பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்க IMF திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த கடனுதவியை உடனே தரும்படி பாகிஸ்தான் அழுத்தம் தரத் தொடங்கியுளதால் அதுகுறித்து IMF குழு இன்று மதிப்பாய்வு செய்ய உள்ளனர்.இந்நிலையில் இந்த இக்கட்டான போர் சூழலில் IMF பாகிஸ்தானுக்கு நிதி விடுவிக்க வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். ஏற்கனவெ கடந்த 30 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட கடன்களை அவர்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தினார்களா, அல்லது வேறு எதற்கேனும் பயன்படுத்தினார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Added a post
அனுபவமே சிறந்த ஆசான் !பசியோடு ஓட்டலுக்குள் நுழைந்தேன்அங்கு நடந்த கதை‘‘இதோ பார்… நாளையிலிருந்து இuந்த அழுக்கு பேன்ட்டெல்லாம்போட்டுட்டு வரக்கூடாது… பளிச்னு சுத்தமா இருக்கணும்’’என்று இளம் வயது சர்வரை எச்சரித்துக்கொண்டு இருந்தார்முதலாளி.தலையாட்டிவிட்டு என்னிடம் வந்தவன், ‘‘என்ன சாப்பிடறீங்க?’’என்றான்.பின்னாலேயே வந்த முதலாளி, ‘‘வர்றவங்களுக்கு முதல்லவணக்கம் சொல்லுடா’’ என்று கோபப்பட்டார்.இட்லி, சாம்பார் கொண்டுவரச் சொன்னேன்.வரும் வழியில் இன்னொரு சர்வர் மேல் மோதி, சாம்பார் கிண்ணம்கீழே விழுந்தது.‘‘கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு… இப்படி மேலும்கீழுமா கொட்டினா, லாபம் எங்கிருந்து வரும்?’’ – மறுபடி முதலாளிஎரிந்து விழுந்தார்.இட்லி சாப்பிட்டதும், ‘‘அவ்வளவுதானே சார்?’’ என்றான் சர்வர்.‘‘டேய்… அறிவு கெட்டவனே! இன்னும் என்ன சாப்பிடறீங்கன்னுகேளுடா!’’ என்று அவன் தலையில் குட்டினார்.எனக்குப் பரிதாபமாய் இருந்தது. சாப்பிட்டு முடித்து பில்லுக்குப்பணம் தரும்போது முதலாளியிடம் கேட்டேன். ‘‘ஏங்க… வறுமைதாங்க முடியாம பொழைக்க வந்தவன்கிட்ட இப்படியா கடுமையாநடந்துக்கறது?’’முதலாளி சிரித்தபடி சொன்னார்… ‘‘சார்! இவன் என் பையன்.தனியா ஓட்டல் ஆரம்பிக்கணும்னு ஆசைப்பட்டான். அதான் நெளிவுசுளிவை எல்லாம் கத்துக்கொடுக்கறேன்.பையனும் சிரித்தான்.
Added a post
1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.7. கரந்தப் பால் காம்பில் ஏறாது.8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை.9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும்.14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. (எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.. (எல்லாம் காலத்தின் கோலம்.)18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).19. உள்ளப் பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு மனம் ஏங்குதாம்.20. இறுகினால் களி. இளகினால் கூழ்.21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).24. விசாரம் முற்றினால் வியாதி. (கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)26. காற்றில்லாமல் தூசி பறக்காது.(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.32. வாங்குகிற கை அலுக்காது.(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது.)33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.
Added a post
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம்மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலம் உண்டாகும். பிரபலமானவர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். தாமதம் குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மிதுனம்நினைத்த காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் உயரும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைகள் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு கடகம்பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் சிம்மம்வரவுக்கு ஏற்ப விரயங்கள் ஏற்படும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். பேச்சுத் திறமைகளால் புதிய வாய்ப்புகளை உண்டாக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சினம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கன்னிபிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகள் தாமதமாகி நிறைவேறும். தொழில் சார்ந்த பயணங்கள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை துலாம்கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். அச்சம் மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : நீலம் விருச்சிகம்குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். சொத்து சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு தனுசுவியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை குறையும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கனிவான பேச்சுகள் ஆதரவை மேம்படுத்தும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மகரம்உடன்பிறந்தவர்களின் இடத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணம் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கும்பம்சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இனம்புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மீனம்கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
Added a post
விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 9.5.2025.இன்று மாலை 04.56 வரை துவாதசி. பிறகு திரியோதசி.நட்சத்திரம் : இன்று முழுவதும் அஸ்தம்.நாமயோகம் : இன்று அதிகாலை 03.13 வரை ஹர்ஜனம். பிறகு வஜ்ரம்.கரணம் : இன்று அதிகாலை 04.06 வரை பவம். பின்னர் மாலை 04.56 வரை பாலவம். பிறகு கௌலவம்.அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 05.53 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்நல்ல நேரம்பகல் : 12.30 முதல் 01.30 மணி வரைபகல் : 01..30 முதல் 02.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
Added a news
புதிய மின் கட்டண சீராக்கம் தொடர்பான யோசனையை, இலங்கை மின்சார சபை இம்மாதம் 15ம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மின் கட்டண சீராக்கம் தொடர்பான யோசனையாக இது அமையவுள்ளது. இதன்படி புதிய மின்சார கட்டண சீராக்கம் எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் அமுலாகும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சார கட்டணமானது அதன் செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று, சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
Added a news
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வேட்பாளர் ஒருவர் நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இவ்வாறு நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களும் தலா 320 வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து, இரண்டு வேட்பாளர்களின் சம்மதத்துடன் அங்கு நாணய சுழற்சி இடம்பெற்றது. குறித்த நாணய சுழற்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றி பெற்றதுடன், உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள். கிண்ணியா நகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத்தில் றஹ்மானியா வட்டாரத்தில் எம்.எம்.மஹ்தி மற்றும் மாஞ்சோலை வட்டாரத்தில் ரசாட் முஹம்மட் ஆகியோர்களுமே வெற்றி பெற்றுள்ளனர்.000
Added a news
2025 உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மே 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தங்கள் பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இந்த அறிக்கைகள் அந்தந்த தேர்தல் மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான ஆணையத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த செயல்முறை இருப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.இருப்பினும், அறிக்கையிடல் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறும் வேட்பாளர்களுக்கு எதிராக அபராதங்களைச் செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க இடைவெளி இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் (IRES) நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க சுட்டிக்காட்டினார்.தேர்தல் செயல்முறையின் நேர்மையை நிலைநிறுத்த, இணங்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தெளிவான சட்ட விதிகள் மற்றும் வழிமுறைகள் தேவை என்பதை கஜநாயக்க வலியுறுத்தினார்000
Added a news
தேர்தல் ஆணையகம் இலங்கை உள்ளுரதிகார சபைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், தாமதமின்றி சட்டப்பூர்வமாக பெண்களுக்கு கிடைக்கக் கூடிய உறுப்பினர்களுக்கான 25 சத விகித சட்டபூர்வ ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யும் செயல்முறையை தொடங்க வேண்டும் என நாட்டிலுள்ள 34 தன்னார்வ அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.இது தொடர்பாக தேர்தல் ஆணையத் தலைவருக்கும் ஆணைக்குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கும் தன்னார்வ அமைப்புக்கள் கையெழுத்திட்டு கூட்டாக அனுப்பி வைத்துள்ளனர்.குறித்த வேண்டுகோளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இம்முறை இடம்பெற்ற உள்ளூர் அதிகார சபை தேர்தலில் குறைந்த வாக்காளர் எண்ணிக்கை இருந்தபோதிலும், பிரசாரம் செய்தல், வாக்களித்தல், போட்டியிடுதல் இருப்புப் அனைத்து அம்சங்களிலும் - பெண்கள் வெளிப்படையாகவே தீவிரமாக இருந்தனர்.முந்தைய உள்ளாட்சி மன்றங்களைச் சேர்ந்த பல அனுபவம் வாய்ந்த பெண்கள், கட்சி ஒப்புதல் மூலமாக மறுக்கப்பட்டபோது இம்முறை அவர்கள் சுயாதீனமாக போட்டியிட்டனர்.இந்தத் தேர்தல் பெண்கள் வாக்குகளைப் பெறுவதிலும், உள்ளூர் அரசியலில் மீண்டும் நுழைவதிலும் நம்பிக்கைக்குரிய அதிகரிப்பைக் குறிக்கிறது.இருப்பினும், பல கட்சிகள் ஒன்று அல்லது இரண்டு இடங்களை மட்டுமே பெற்றுள்ளதால், “ஒவ்வொரு மூன்று இடங்களுக்கும் ஒரு பெண்” எனும் தேவையை நிறைவேற்றுவதை மிகவும் சிக்கலாக்கியுள்ளது.கடந்த கால போக்குகள், வரம்பு பூர்த்தி செய்யப்பட்டாலும் கூட, பெண்களை பரிந்துரைக்கும் கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.மேலும் முந்தைய தேர்தல்களில், சில உள்ளூர் அதிகாரிகள் 25 சதவீத ஒதுக்கீட்டை முழுவதுமாக வழங்கத் தவறிவிட்டனர்.உள்ளூர் அதிகாரசபை தேர்தல்கள் சட்டத்தின் 2017 திருத்தத்தின்படி, தேர்தல் ஆணையம், 25 சதவீத பெண்களுக்கான ஒதுக்கீடு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளது.இதில், முதல் – பின் - பதிவு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத பெண்களுக்கு ஈடுசெய்ய விகிதாசார பிரதிநிதித்துவப் பட்டியலைப் பயன்படுத்துவதும் அடங்கும்.ஒவ்வொரு உள்ளூர் சபையிலும் இளம் பெண்கள் உட்பட குறைந்தது 25 சதவீதம் பெண்கள் இருப்பதை உறுதிசெய்வது எனும் இணக்கப்பாட்டை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் வேண்டும்.ஒரு கட்சி இரண்டு இடங்களைப் பெறும் போது, குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்கு பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணையம் வலியுறுத்த முடியும், வலியுறுத்த வேண்டும்.ஒதுக்கீட்டை நிறைவேற்றத் தவறும் அரசியல் கட்சிகள் பகிரங்கமாகப் பொறுப்பேற்கப்பட வேண்டும்.பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டை அமுல்படுத்துவது, உள்ளூர் நிர்வாகத்தில் பாலின பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதும் தேர்தல் ஆணையத்தின் சட்டபூர்வ நெறிமுறைக் கடமையாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.” என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 21.80 சதவீதமாக அமுல்படுத்தப்பட்டது என்றும் அது பெண்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கீட்டை வழங்கும் 25 சதவீதம் எந்த நடைமுறையை முழுமையாக அமுலாக்கவில்லை என்பதையும் கவனத்திற் கொண்டு இம்முறையும் அவ்வாறே புறக்கணிக்கப்படுமாயின், இது விடயமாக அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்றம் செல்ல தயார் செய்வதாக பெண்கள் செயல்பாட்டு வலையமைப்பின் ஸ்தாபகரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஷிரீன் ஷரூர் தெரிவித்துள்ளார்.00
Added a news
கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவர் இவர் ஆவார். அவர் போப் லியோ XIV என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்.அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் போப் லியோ XIV ஆக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு உலகம் முழுவதும் நம்பிக்கையுடன் கூடிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏராளமான நாடுகளின் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 69 வயதான ரொபர்ட் பிரீவோஸ்ட், செயிண்ட் பீட்டர் சிம்மாசனத்தின் 267 ஆவது தலைவராக இருப்பார். போப் பதவியை வகிக்கும் முதல் அமெரிக்கர் இவர்தான்.எனினும், அவர் பெருவில் ஒரு மிஷனரியாக பல ஆண்டுகள் கழித்ததன் காரணமாக, அங்கு பிஷப்பாக மாறுவதற்கு முன்பு லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஒரு கார்டினலாகக் கருதப்படுகிறார்.ஸ்பானிஷ் மற்றும் பிராங்கோ-இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு 1955 இல் சிகாகோவில் பிறந்த பிரீவோஸ்ட், பலிபீடப் பையனாகப் பணியாற்றினார். 1982 இல் பாதிரியாராக நியமிக்கப்பட்டார்.மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் பெருவுக்குச் சென்றாலும், அவர் தனது சொந்த நகரத்தில் ஒரு போதகராகவும், ஒரு முன்னோடியாகவும் பணியாற்ற அமெரிக்காவிற்குத் தொடர்ந்து திரும்பி வந்தார்.அவர் பெருவியன் குடியுரிமை பெற்றவர், மேலும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுடன் பணியாற்றிய மற்றும் தொடர்புகளை பேண உதவிய ஒரு நபராக அன்புடன் நினைவுகூரப்படுகிறார்.அவர் உள்ளூர் திருச்சபை போதகராகவும், வடமேற்கு பெருவில் உள்ள ட்ருஜிலோவில் உள்ள ஒரு செமினரியில் ஆசிரியராகவும் 10 ஆண்டுகள் பணியாற்றினார்.லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஆயர்களுக்கான டிகாஸ்டரியின் தலைமைப் பொறுப்பாளராக அவர் வகித்த உயர் பதவி காரணமாக அவர் கார்டினல்களுக்கு நன்கு அறியப்பட்டவர்.இந்த அமைப்பு ஆயர்களைத் தேர்ந்தெடுத்து மேற்பார்வையிடும் முக்கியமான பணியைக் கொண்டுள்ளது.2023 ஜனவரியில் அதே நேரத்தில் அவர் பேராயரானார். மேலும் சில மாதங்களுக்குள் பிரான்சிஸ் அவரை ஒரு கார்டினலாக ஆக்கினார்.தன்னை கத்தோலிக்க திருச் சபையின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்காக சக கார்டினல்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இத்தாலியன், ஸ்பானிஷ் மற்றும் லத்தீன் மொழிகளில் பேசினார்.மறைந்த போப் பிரான்சிஸைப் பற்றியும் அவர் அன்புடன் பேசினார், மேலும் கூட்டத்தை ஜெபத்தில் வழிநடத்தி முடித்தார்.சிஸ்டைன் தேவாலயத்தின் மேல் உள்ள புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறிய பின்னர் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவின் பால்கனியில் தோன்றினார். இது உள்ளே இருந்த 133 கார்டினல்கள் ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுத்ததைக் குறிக்கிறது.000
Added a news
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட குறித்த உலங்குவானூர்தி மாதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார். உலங்குவானூர்தியின் விமானிகள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த உலங்குவானூர்தியில் விமான கட்டுப்பாட்டாளர்கள் இருவர் உட்பட 11 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 9 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்000
Added article
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.