Added a post
தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.** நோய் எதிர்ப்பு சக்தி :தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்** சக்தி தரும் :மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ரை பண்ணிப் பாருங்களேன்.** ஜீரண சக்திக்கு :உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்க்லை குனமாக்குகிறது** சர்க்கரை வியாதிக்கு :தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.** இதயம் :இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.** தைராய்டு :நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.** புற்று நோய் :ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது.** உடல் எடை :உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உட்ல எடை குறையும்.** சிறு நீரகம் :சிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிரு நீரகத்தை பெறலாம்.** முதுமை :தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வய்தான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.
Added a post
அக்பரை காண வெளிநாட்டில் இருந்து அறிஞர் வந்தார். அப்போது அக்பர் அரண்மனையிலிருந்த சில அலுவலர்களோடு சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தார்.இறுக்கமான முகத்தோடு விரைப்பாக பாதுஷா இருப்பார் என்று எதிர்பார்த்து வந்த அந்த அறிஞருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.அவர் உடல்மொழியைக் கண்டு கொண்ட அக்பர் அந்த அறையின் மூலையில் இருந்த வில்லைக்காட்டி “இந்த வில் எப்போதும் நாண் ஏற்றப்பட்டிருந்தால் என்ன ஆகும்?" என்று கேட்டார்.வந்தவர், "வில் முறிந்துபோகும்" என்றார். "நாண் ஏற்றப்படாமலே இருந்தால் என்ன ஆகும்" என்று வினவினார் அக்பர். "வில் பயன்படாமல் போய்விடும்" என்றார் அந்த அறிஞர்.அக்பர், "தேவைப்படும்போது நாண் ஏற்றுவதைப்போல வேண்டியபோது கடுமையாகவும், மற்ற நேரங்களில் கனிவாகவும் இருப்பதுதான் நல்ல ஆட்சியாளரின் அழகு" என்று குறிப்பிட்டார்.பணியிலும் குடும்பத்திலும் இந்த சம்பவத்தை நினைவில் கொள்ளுங்கள் சிறந்த மனிதராக ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள்.
Added a post
கருஞ்சீரகத்தை, ஆங்கிலத்தில் பென்னல் பிளவர் என்று அழைக்கிறோம். பிளாக் காரவே நட்மக் பிளவர், ரோமன் கொரியாண்டர் என அவற்றின் சுவைகளை வைத்து பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. கருஞ்சீரகத்தை, வறுத்தோ அல்லது வறுக்காமலேயா நாம் நம் உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம்.கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், அது ஆற்றல் மையமாக விளங்கி வருகிறது. இதுமட்டுமல்லாது,கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், 17 சதவீத புரதமும், 26 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் மற்றும் 57 சதவீதம் தாவர எண்ணெய்களும் உள்ளன.கருஞ்சீரகத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், அது நம் நினைவுத்திறனை அதிகரிக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் இதனை தினசரி உண்டுவந்தால், மூளையின் செயல்பாடு சிறந்த விதத்தில் இருக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவுத்திறன் குறைவுக்கு இது சரியான தீர்வாக அமையும். கருஞ்சீரகத்தை, புதினா இலைகள் சேர்த்து பயன்படுத்தி வந்தால், அது அல்சைமர் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளுக்கான சிறந்த தீர்வாக அமையும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.டைப் 2 நீரிழிவு நோயாளிகள், கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால், அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் நல்ல பலனைப்பெற, பிளாக் டீ உடன் கருஞ்சீரகத்தை சேர்த்து உண்பதால் நல்ல பலனை பெறலாம்.கருஞ்சீரக விதைகள், இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. இரத்தத்தில், கெட்ட கொழுப்புகளின் அளவை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. கருஞ்சீரகத்தை, பாலில் கலந்து குடித்தால், நல்ல பலனை பெறலாம்.கருஞ்சீரக விதைகளில், ஆன்டி – இன்பிளமேட்டரி பண்புகள் உள்ளதால், உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது. கருஞ்சீரக எண்ணெயை, கை, கால் மூட்டுகளில் தடவுவதன் மூலம், நல்ல பலனை பெறலாம். உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க, கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்துமாறு, ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.கருஞ்சீரக எண்ணெய், நமது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு மட்டுமல்லாது, ரத்த அழுத்த மாறுபாடு ஏற்படாவண்ணம் பாதுகாக்கிறது. உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், வெதுவெதுப்பான நீரில், கருஞ்சீரக எண்ணெயை கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.கருஞ்சீரகம், பற்கள் மட்டுமல்லாது,ஒட்டுமொத்த வாய் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஈறுகளில் ரத்தப்போக்கு உள்ளிட்டவைகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது. பல் வலிக்கு உடனடி தீர்வாக கருஞ்சீரகம் விளங்குகிறது. வாய் சம்பந்தமான பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு, அரை தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெயை, ஒரு கப் தயிரில் கலந்து அதை தினமும் இரண்டு முறை, ஈறுகளில் தேய்த்து வர பற்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.ஆஸ்துமாவை குணப்படுத்துகிறதுநவநாகரீக உலகில் ஏற்பட்டுள்ள அதீத மாசுவின் காரணமாக, ஆஸ்துமா என்பது தற்போது சாதாரணமாக எல்லாருக்கும் வரும் குறைபாடாக மாறிவிட்டது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, கருஞ்சீரக மருத்துவம், இனிய வரப்பிரசாதமாக உள்ளது. வெதுவெதுப்பான நீரில், கருஞசீரக எண்ணெய் மற்றும் தேன் கலந்து குடித்துவர நல்ல பலன்கள் கிடைக்கும்.உடல் எடையை குறைக்க உதவுகிறதுகருஞ்சீரகம், நமது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, நாம் சிக் ஆகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில், கருஞ்சீரகத்தை கலந்து தினமும் குடித்து வர , உடல் எடை குறைப்பில் நல்ல மாற்றத்தை காணலாம்.தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு தீர்வுசருமம் மற்றும் முடிகளின் பராமரிப்பிற்கு, கருஞ்சீரகம் முக்கிய பங்காற்றுகிறது. நல்ல பளபளப்பான சருமத்திற்கு, கருஞ்சீரக எண்ணெயை, எலுமிச்சை சாற்றில் கலந்து முகத்தில் தடவி வர வேண்டும்.கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள், முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு மட்டுமல்லாது, முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது.சிறுநீரகத்தை பராமரிக்கிறதுநீரிழிவு காரணமாக, சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய,கருஞ்சீரகம் பெரிதும் துணைபுரிகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, கிரியாட்டினின் சீரம் அளவை அதிகப்படுத்துகிறது. ரத்தத்தில், யூரியாவின் அளவை கட்டுப்படுத்துகிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சீறுநீரக பாதிப்புகளுக்கு தீர்வு அளிக்கிறது.புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள், உடலில் உள்ள புற்றுநோயை உருவாக்கும் ப்ரீ ரேடிகல்ஸ்களை எதிர்த்து போராடுகிறது. மார்பக புற்றுநோய், செர்விகல் கேன்சர், நுரையீரல் புற்றுநோய், பான்கிரியாட்டிக் புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது.தலைவலிகளுக்கு தீர்வு அளிக்கிறதுஇன்றைய இளைய தலைமுறையினர், தலைவலி உள்ளிட்டவைகளால் அவதிப்படும் நிலையில், அவர்களுக்கு நவீன மருத்துவ முறைகளை காட்டிலும், இயற்கை மருத்துவம், அவர்களுக்கு சிறந்த பயனை அளித்து வருகிறது. தலைவலியால் அவதிப்படுபவர்கள்,கருஞ்சீரக எண்ணெயை, முன்தலையில் சிறிது தடவிவர, கடுமையான தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.கருஞ்சீரகத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் பிற நன்மைகள்மலச்சிக்கலுக்கு குணம் அளிக்கிறதுமூல நோய்க்கு தீர்வு அளிக்கிறதுஉடலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கிறதுவயிற்றுப்புண்ணை குணப்படுத்துகிறது.
Added a post
கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது.தெய்வீக மூலிகை, இடிதாங்கியாக செயல்படுவதினால் தமிழர்கள் வீடு தோறும் வளர்த்தனர்.சாதாரண துளசி செடி போலவே கருந்துளசி இருக்கும். ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும். சித்தர்களால் உண்டாக்கப்பட்ட மூலிகை இது.பெண்களுக்கு வயிற்றில் இறந்த குழந்தை வெளியேற கருந்துளசி கொண்டுவந்து ஆய்ந்து உரலில் போட்டு இடித்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து ஒரு குவளை சாறுடன் நான்கு தேக்கரண்டி அளவு எள் எண்ணெய் விட்டு கலக்கி உள்ளே கொடுத்துவிட்டால் கால் மணி நேரத்தில் இறந்த குழந்தை வெளியேறிவிடும்.இந்தக் கருந்துளசியினால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துக் கொள்வோம்.மிளகுடன் 10 துளசி இலைகளை பறித்து மென்று விழுங்கினால் தொண்டையில் உள்ள சளி முற்றிலுமாக நீங்கிவிடும்.காலையில் எழுந்தவுடன் பல்லைக் கொப்பளித்துவிட்டு 5 இலைகளை உட்கொண்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று உபாதைகள் நீங்கி விடும்.வாய் துர்நாற்றத்தைப் போக்க கருந்துளசி இலைகளை பறித்து வாயில் மென்றால் பற்களில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். வாயும் துளசி மணம் கமழும்.ஒரு செடி வைத்து வளர்த்தால் அதன் விதைப்பட்டு பல செடிகள் அதன் அருகே வந்துவிடும். வறட்சியைத் தாங்கக்கூடியது. அதில் வேதிப்பொருட்கள் நிறைய இருக்கின்றது.இரவில் செம்பு (அ) பஞ்ச உலோகப்பாத்திரத்தில் 10 துளசி இலைகளை நசுக்கிப் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து விடவும். பின் காலையில் வெறும் வயிற்றில் பல்லைக் கொப்பளித்துவிட்டு அந்த தண்ணீரினைப் பருக வேண்டும். உடலில் உள்ள அனைத்து தாதுப்பிரச்னைகளும் தீர்ந்துவிடும். தேகம் மிளிரும். புற்றுநோய்கூட உடனே கரைந்து போய்விடும் கண்புரை ஏற்பட்டாலும் சரிசெய்துவிடும்.* கருந்துளசியானது சுற்றுப்புறச்சூழலுக்கு மிகுந்த நண்பனாக இருக்கின்றது. ஓசோன் படலத்தில் உள்ள பாதிப்பை சரி செய்கின்றது.தினமும் கருந்துளசியை தவறாமல் எடுத்து வந்தால் 48 நாட்களில் சளி மற்றும் கபநோய்களிடம் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம்.கருந்துளசியை சளித்தொல்லைக்கு ஒரு சிறந்த மருந்துச் செடியாக குறிப்பிடலாம். ‘ஆசிமம் டெனியபுளோரம் டைப்பிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடிகளின் இலைகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.சிறிது கருந்துளசி இலைகளை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கருந்துளசியை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லைகளால் ஏற்பட்ட சளி நீங்கும்.அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க 5 அல்லது 10 கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊற வைத்து, அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 5, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்
Added a post
திருக்கோயிலூர் மன்னராக இருந்து, சைவ சமயத்தின் புனித அடையாளங்களான ருத்திராட்சம், புனித சாம்பல் போன்றவற்றின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததால் இவ்வாறு அழைக்கப்பட்டார். அவனது அண்டை வீட்டாரான முத்தநாதன் அரசன் அடிக்கடி போரில் அவனைக் கைப்பற்ற முயன்றான் ஆனால் பலனில்லை. இறுதியாக முத்தநாதன், சிவபக்தன் வேடமணிந்து நாயனாரின் அரண்மனைக்குள் மறைவான வாளுடன் சைவத்தைப் போதிப்பதாகக் காட்டிக் கொண்டு அவரைக் காயப்படுத்தினார். அவரது உடம்பில் இருந்த ‘மெய்ப்பொருள்’ கண்டு நாயனார் பழிவாங்கவில்லை. நாயனாரின் மெய்க்காப்பாளர் தத்தன் வாளால் முத்தநாதன் மீது பாய்ந்தான். ஆனால் நாயனார், அவர் இறக்கும் தருணத்திலும், சிவபக்தன் வடிவில் அங்கு வந்திருந்ததால், முத்தநாதனுக்கு தீங்கு செய்ய வேண்டாம் என்று கட்டளையிட்டார். மேலும் முத்தநாதனைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்படி தத்தாவிடம் கேட்டுக் கொண்டார். இதனால் மெய்ப்பொருள் நாயனார் தம் உடலை விட்டு முக்தி அடைந்தார்.சிவபுராணம் கூறுவது போல், “ருத்ராக்ஷம் மற்றும் பாஸ்மா அல்லது புனித சாம்பலைத் தன் உடலில் அணிந்துகொண்டு, பஞ்சாக்ஷர மந்திரத்தை (ஓம் நம சிவாய) தன் நாக்கால் உச்சரிப்பவர் உயர்ந்தவர்களில் உயர்ந்தவர். அப்படிப்பட்டவரின் தரிசனம் சிவனை தரிசனம் செய்வதற்கு சமம்”. இக்கதை பக்தியின் தீவிரத்தையும் ‘மெய்ப்பொருளின்’ முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. பக்தியின் உயர்ந்த நிலையை அடைய நாம் அனைவரும் முடிந்தவரை ‘மெய்ப்பொருள்’ நடத்த வேண்டும்.அனைவரிடமும் இறைவனைக் காண்பது பக்தி என்றால் எதிரியிடமும் கூட இறைவனைக் காண்பது என்பது மிகப் பெரிய பக்தி ஆகும்.
Added article
டி.ராஜேந்தர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டார்.தனது தந்தையை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார் சிம்பு, சிகிச்சைக்கு பின் இந்தியா திரும்பியவர் அதிகம் சினிமா நிகழ்ச்சிகளில் தலைக்காட்டாமல் இருந்தார்.இந்த நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டி.ராஜேந்தர் அவர்களை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர். சுத்தமாக ஆளே மாறிவிட்டார், தலையில் முடி கொட்டி, விறுவிறுவென நடப்பவர் மிகவும் பொறுமையாக நடந்து வந்துள்ளார்.
Added article
மோகன் உணவகம் ஒன்றில் சந்தித்த பி. வி. கராந்த் என்பவரால் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவரின் முதல் நாடகத்தை தில்லியிலிருந்தும் விமர்சகர்கள் பாராட்டினர். இவர் கன்னடத் திரையுலகிற்கு பாலு மகேந்திராவின் கோகிலா திரைப்படத்தில் (1977) தமிழ் நடிகர் கமல்ஹாசனுடன் அறிமுகமானார் . 1980 இல் மூடுபனி வெளியானதிலிருந்து இவர் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரானார். 1980 களில் மோகன் 'வெள்ளி விழா நாயகன்' என்று அழைக்கப்பட்டார். இவர் நடித்த கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களும் வெற்றி அடைந்தது.கோகிலாவுக்குப் பிறகு, மடலசா (1978) என்ற மலையாளத் திரைப்படத்தில் மோகன் நடித்தார் . இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, மோகன் என்ற பெயருடன் கிழக்கே போகும் ரயில் (1979) என்ற தமிழ்த் திரைப்படத்தின் மறுஆக்கமான தூர்ப்பு வெள்ளே ரயில் என்ற தெலுங்கு படம் ஒன்றில் கையெழுத்திட்டார். தெலுங்கு பதிப்பை பாபு இயக்கியுள்ளார் . அதன்பிறகு இயக்குனர் மகேந்திரன் இவரை நெஞ்சத்தை கிள்ளாதே தமிழில் அறிமுகப்படுத்தினார். இந்த படம் ஓராண்டு ஓடியதுடன் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது .இவரது நடித்த திரைப்படங்கள் வெள்ளி விழா அல்லது 200 நாட்களுக்கு மேல் ஓட தொடங்கியது. இவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தில் (1982) பெற்றார். இதனால் தமிழில் பெரிய நடிகரானார்.இவர் மைக் பிடித்து பாடும் மேடைப் பாடகராக நடித்ததில் மிகவும் பிரபலமானார்.இதனால் மைக் மோகன் என்றும் பட்டப் பெயர் வைத்து அழைக்கப்பட்டார்.. இவர் பல்துறை நடிகரில்லை என்று ஒரு பொதுவான கருத்து இருந்தது. இவர் நடித்த விதி (1984), நூறாவது நாள் (1984), ரெட்டை வால் குருவி (1987), மற்றும் சகாதேவன் மகாதேவன் (1988) போன்ற வெற்றிப் படங்களில் உச்சத்தை அடைந்தார்.கோவைதம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக அதிக திரைப்படங்களில் நடித்தார். 1986 ஆம் ஆண்டில் மௌன ராகம் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கினார்.இப்படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றதோடு, இயக்குனர் மணி ரத்தினத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் இருக்கும் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் 80 களின் திரைப்படங்களுக்காகவும், இளையராஜாவின் பாடல்களுக்காகவும், பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தாலும் இன்றும் பேசப்படுகிறார்.பயணங்கள் முடிவதில்லை படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான "பிலிம்பேர் விருது "கிடைக்க பெற்றார்.80களின் தமிழ்த் திரை உலகின் அசைக்க முடியாத நாயகனாக இருந்தவர் மோகன். மைக் மோகன் என்று சொல்லும் அளவுக்கு அவர் மைக் பிடித்துப் பாடாத படங்களே இல்லை என்று சொல்லாம்… எல்லாமே சூப்பர் ஹிட்தான்." ராஜா ஹிட்ஸ்" என்றால் அதில் மோகன் படப் பாடல்களே பிரதானம்.ஒரு நாளைக்கு 18 மணிநேரம் என ஓயாமல் நடித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தவர்.ஒரு நடிகையின் காதலை ஏற்காததால், அவர் பரப்பிய அவதூறான 'மோகனுக்கு எயிட்ஸ் 'எனும் பெயரால் திரையுலகை விட்டு விலகும் நிலைக்கு ஆளாக்கப்பட்டார்.திருமண வாழ்க்கைமோகன் 1987 இல் கௌரியை மணந்தார். தம்பதியருக்கு ஆகாஷ் என்ற மகன் 1989 இல் பிறந்தார்.மோகன் ஹிட்ஸ்என்னோடு பாட்டுப் பாடுங்கள்..கூட்சு வண்டியிலே..இளைய நிலா பொலிகிறது…இதயம் ஒரு கோவில்…குழல் ஊதும் கண்ணனுக்கு…மணி ஓசை கேட்டு எழுந்து…மன்றம் வந்த தென்றலுக்கு…நான் பாடும் மவுனராகம்…நிலாவே வா…செல்லாதே வா…பாடு நிலாவே…தேன் கவிதை…நிலவு தூங்கும் நேரம்…ஊரு சனம் தூங்கிருச்சு….பாட வந்தோர் கானம்…பல்லவி இல்லாமல் பாடுகிறேன்…பருவமே …புதிய பாடல் பாடு….16.புதிய பூவிது பூத்தது … இன்றைக்கும் இந்தப் பாடல்களில் தம்மை இழக்காதவர்கள் இல்லை எனலாம்.நடிகர் மோகன் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் பொதுமக்களிடையே மிகவும் பிரபலமானார் என்று சொன்னால் அது மிகையாகாது.
Added a post
* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.* எண்ணை குடத்தை சுற்றிய எறும்பு போல* தன் காயம் காக்க வெங்காயம் போதும்* வாழை வாழ வைக்கும்* அவசர சோறு ஆபத்து* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*இருமலை போக்கும் வெந்தயக் கீரை* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.* உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை* சித்தம் தெளிய வில்வம்* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி* சூட்டை தணிக்க கருணை கிழங்கு* ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்* தலைவலி நீங்க முள்ளங்கி சாறு* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி* மூலநோய் தீர வாழைப்பூ கூட்டு* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி* வாத நோய் தடுக்க அரைக் கீரை* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்* பருமன் குறைய முட்டைக்கோஸ்* பித்தம் தணிக்க நெல்லிக்காய்” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.
Added a post
ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்" ஐ லவ் யூ அப்பா".மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ
Added a recipe
மதிய உணவுகள்
கொஞ்சம் அடி கனமான சட்டியை அடுப்பில வச்சு நல்லா சுட வச்சுக்கோங்க. அதில துவரம் பருப்பையும், பாசிப்பருப்பையும் தனித்தனியா எண்ணெய் சேர்க்காம நல்லா சிவந்து வாசம் வரும் அளவுக்கு வறுத்து ஒரு தட்டுல கொட்டிகோங்க.அடுத்ததா பொட்டுக்கடலையை அதே சட்டியில போட்டு, லேசா சூடு ஆகும்படி வறுத்து, அதையும் தட்டில் மாற்றிக்கோங்க. வரமிளகாய் உடையும் அளவிற்கு வறுபட வேண்டும். அடுத்ததாக ஜீரகம், பெருங்காயம் இரண்டையும் வறுத்து அதே தட்டில் கொட்டிக்கோங்க. கறிவேப்பிலை இரண்டு கொத்து மொருமொருன்னு உடையும் அளவுக்கு வறுத்து எடுத்துக்கோங்க.10 பல் பூண்டை, நல்லா உரல்ல போட்டு இடிச்சிட்டு சட்டியில ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பூண்டை ப்ரவுன் கலர் வரும் அளவுக்கு வறுக்கணும். பூண்டில் ஈரப்பதம் இருந்தால், பருப்பு பொடி, சீக்கிரமாக கெட்டுப்போய்டும். அதனால ஈரம் இல்லாம வறுத்துடுங்க.வறுத்த இந்த பூண்டையும், தட்டில் கொட்டி நல்லா ஆற வச்சுடுங்க. கடைசியா அடுப்பை அனைச்சுட்டு , உப்பை அந்த கடாயில் போட்டு, உப்போட ஈரப்பதம் போற அளவுக்கு அரை நிமிஷம் வறுத்துடுங்க.அதையும் தட்டில் கொட்டிகோங்க.... இப்போ எல்லா பொருட்களையும் ஆறினத்துக்கு அப்புறம் , மிக்ஸி ஜார்ல போட்டு பொடியா அரைச்சுட்டா , சுவையான காரசாரமான பருப்பு பொடி தயார்.காத்து புகாத டப்பாவில போட்டு வச்சிகிட்டா 3 மாசம் வரைக்கும் இதை வச்சி நீங்க பயன்படுத்திக்கலாம்...
Added a post
பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று வாகனத்தில் ஊர்வலம் வந்த போது முன் இருக்கையில் அவரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அமர்ந்திருந்தாராம்.. பில் கிளிண்டன் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாராம்... வாகனம் திடீரென நின்று விட்டது காரணம் பெட்ரோல் இல்லை.. உடனே அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வாகனம் கொண்டு செல்லப்பட்டது. ஒருவர் பெட்ரோல் போடுகிறார். பெட்ரோல் போட்டு முடித்தவுடன் அந்த பெட்ரோல் போட்ட ஊழியர் காரின் கண்ணாடியை தட்டி முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஹிலாரி கிளிண்டனிடம் ஹிலாரி How are you என்று கேட்க பதிலுக்கு ஹிலாரியும் I'm fine என்று சொன்னாராம்...கண்ணாடி ஏற்றப்பட்டு வாகனம் புறப்பட்டது. பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பில்கிளிண்டன் ஆச்சரியத்துடன் தன் மனைவி ஹிலாரியை பார்த்து கேட்டாராம் ஹிலாரி நீ ஒரு அமெரிக்க அதிபரின் மனைவி மற்றும் வெள்ளை மாளிகையில் குடியேறப் போகும் அதிஷ்டசாலி.. இந்த சாதாரன பெட்ரோல் பங் ஊழியர் உனக்கு எப்படி தெரியும் என்றவாறு.. அதற்கு ஹிலாரி கிளிண்டன் சொன்னாராம் ஓ... அதுவா அவன் என்னுடைய கிளாஸ் மெட் அவன் பெயர் அலெக்சாண்டர். அவன் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். பள்ளியில் நன்றாக படிப்பவன் அது மட்டுமல்ல என்னை அதிகமாக நேசிப்பவன் என்ன செய்ய காலத்தின் சூழ்நிலை அவன் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறான்... என்றார்.. வாகனம் போய் கொண்டே இருக்கிறது...பில்கிளிண்டன் ஹிலாரியிடம் கிண்டலாக ஒரு வேளை உன்னை அதிகமாக நேசித்த அவனை நீ நேசித்து திருமணம் செய்து இருந்தால் இன்றைக்கு பெட்ரோல் பங் ஊழியரின் மனைவியாக இருந்திருப்பாய் அப்படி தானே ஹிலாரி என்றாராம்... அதற்கு ஹிலாரி சொன்னாராம் "அப்படி அல்ல மிஸ்டர் பில் கிளிண்டன் அந்த அலெக்சாண்டர் அமெரிக்க அதிபராக இருந்திருப்பான்...... நீங்கள் பெட்ரோல் பங் ஊழியராக இருந்திருப்பீர்" என்றாராம்....நண்பர்களே....... பல நேரங்களில் மனைவியின் திறமைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம், ஆனால் நாம் கெத்தோடும் சத்தோடும் வாழ்வது நம் துணையினால் தான் என்பதை மறந்து விடக்கூடாது..
Added a news
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பயணிகள் தொடருந்திலிருந்து நேற்றைய தினம் 300 க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் மீட்கப்பட்டதாகப் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. மீட்பு நடவடிக்கையின் போது 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த மீட்பு நடவடிக்கைக்கு முன்னதாக பலூச் விடுதலை இராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பினால் 21 பொதுமக்களும் 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது. தொடருந்து சிறைப்பிடிக்கப்பட்ட போது அதில் சுமார் 440 பயணிகள் இருந்ததாகப் பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் சில பயங்கரவாதிகள் தொடருந்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள மலைப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் துப்பாக்கி முனையில் பணயக் கைதிகள் சிலரை அழைத்துச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. எனினும் அழைத்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளின் எண்ணிக்கை இதுவரையில் உறுதியாகவில்லை எனவும், அவர்களை மீட்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளில் பலூச் விடுதலை இராணுவம் என்ற அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
Added a news
அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலளிக்கும் வகையில், கனடாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 20 பில்லியன் டொலருக்கும் அதிகமான வரிகளை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வாறான வரிகளில், 12.6 பில்லியன் டொலர்கள் வரியை விளையாட்டு பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களுக்கு விதித்துள்ளது. அத்துடன், உணவுப்பொருட்கள், எரிபொருள் என்பவற்றின் விலைகள் குறைக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கனடாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள அனைத்து வரிகளையும் நீக்கும் நோக்கத்துடன், எதிர்வரும் இரண்டாம் திகதி வரை அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாக கனடாவின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.000
Added a news
இலங்கையில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை கவலை வெளியிட்டுள்ளது. சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு மாற்றாக சுமார் 150 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாக அந்த சபையின் தலைவர் வைத்திய நிபுணர் இந்திகா வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். புற்றுநோய் நோயாளர்களுக்கு பரிந்துரைக்கப்படும் வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல மருந்துகள் போதைக்கு அடிமையானவர்களால் அதிகளவில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பெரியவர்களுக்கு மட்டுமல்லாது 15 முதல் 17 வயதுடைய கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் இத்தகைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட ஒரு இலட்சத்து 62,000 பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பொன்றில் நாட்டில் 92,000 முதல் ஒரு இலட்சம் பேர் வரை போதைப்பொருள் அடிமைகளாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அத்துடன், இந்த ஆண்டு இறுதியில் போதைப்பொருள் அடிமையானவர்கள் குறித்து புதிய கணக்கெடுப்பை நடத்துவதற்கு தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தயாராகி வருவதாக அதன் தலைவர் வைத்திய நிபுணர் இந்திகா வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.000
Added a news
இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த பொருத்தமற்ற செயலை 13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் செய்கிறார்கள் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்க இயக்குநர் வழக்கறிஞர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் பெற்றோர் முறைப்பாடு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை செய்த சிறுவர்களும் பாதிக்கப்பட்ட சிறுமிகளும் ஒரே வயதுடைய நண்பர்களாகும்.ஏன் தங்கள் வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்களைத் திருத்தி ஒன்லைனில் பதிவேற்ற AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, அதை முயற்சிக்க விளையாட்டதாக செய்ததாகக் கூறுகிறார்கள்.இவை அந்த சிறுமிகளுக்கு தெரியாமல் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யும் மோசமான செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.000
Added a news
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சட்டத்துக்கமைய தாக்கல் செய்யப்படாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் அது தொடர்பில் அவதானத்துடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,19ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் காலம் நிறைவடையவுள்ளது. தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வேட்புமனுக்களை இரத்து செய்வது எமது நோக்கமல்ல. தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைவருக்கும் அதற்கான வாய்ப்பளிக்கப்பட வேண்டுமெனில் வேட்மனுக்கள் அதற்கேற்றவாறு தவறுகள் இன்றி சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோன்று 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம், 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.அதேபோன்று வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். என்றார். இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி, மார்ச் மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை நீடிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.000
Added a news
ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து சலுகைகளை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்காலத்தில் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க முன்னதாக தெரிவித்திருந்தார்.அவர் மேலும் கூறுகையில், இதன் மூலம் அதிகமான மக்கள் பயனடைய வாய்ப்பாக அமையும். சில சந்தர்ப்பங்களில், சேவை வருங்கால வைப்பு நிதியிலிருந்து 30 சதவீத சலுகைகளை பெறும்போது சிலர் மோசடியான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தூண்டப்பட்டுள்ளனர்.கூடுதலாக, இடைத்தரகர்களின் தலையீடும் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 00
Added a post
புத்தர் ஒருமுறை தமது மேலாடையில் நிறைய முடிச்சுகளைப் போட்டுக் கொண்டே போனார். முடிவில் துணியே முடிச்சுகளின் மூட்டையாகிவிட்டது."முன்போல் துணியை எப்படி ஆக்குவது” என்று சீடர்களைக் கேட்டதும் அவர்கள் திணறினார்கள்.“நான் கடைசியாகப் போட்ட முடிச்சை முதலில் அவிழ்க்க வேண்டும்" என்று கூறியபடி வரிசையாக அத்தனை முடிச்சுகளையும் அவிழ்த்து மறுபடியும் மேலாடையாக்கினார். “நான் போட்ட முடிச்சுகளை நீங்கள் பிரிப்பது கஷ்டம். ஆனால் நானே பிரிப்பது வெகுசுலபம். ஏனென்றால் எதை அடுத்து எது போடப்பட்டது என்பது எனக்குத் தெரியும் இப்படியே உங்கள் மனத்தில் விழுந்த கவலை முடிச்சுகளை நீங்களே அவிழ்ப்பது சுலபம் பிறர் பிரித்துததரவேண்டும் என்று எதிர் பார்ப்பது கடினம்" என்றார்.இன்று பலரும் தங்கள் கஷ்டங்களை வெளியில் இருந்து யாராவது தீர்த்து விட மாட்டார்களா என்று தவிக்கிறார்கள். ஜோதிடர்கள், குறி சொல்லிகள், விளம்பர வெளிச்ச சாமியார் கம்பெனிகள், தாயத்து முதல் தகுடுகள் வரை தந்து மனிதர்களை அடகு பிடித்து விற்பனைக்கு வைக்கும் மந்திர மனிதர்கள் இப்படி யாரிடமாவது போய்ப் பணம், நேரம், ஏன் தன்னையே தொலைக்கின்றார்கள்.ஆனால் நமது பிரச்சினைகளை நாம்தான் தீர்க்க முடியும் என்று கடைசி வரை உணர்வதே இல்லை!
Added a post
மேஷம்குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களின் ஆலோசனைகளால் சிக்கல்கள் குறையும். உறவுகளின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுகள் மேம்படும். வரவுக்கேற்ப செலவுகளும் உண்டாகும். அச்சம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்ரிஷபம்உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய பங்குதாரர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்புகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். திறமைக்குண்டான மதிப்புகள் உருவாகும். விவசாய பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு மிதுனம்அக்கம் பக்கம் ஆதரவாக இருப்பார்கள். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். இனம் புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகளால் புதுமைகளை உருவாக்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் கடகம்குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் கவனம் வேண்டும். வெளி உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் புதிய முயற்சிகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். சலனம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் சிம்மம்புதிய கலைகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். வாக்கு விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிந்தனைகளின் போக்கில் கவனம் வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். ஆர்வம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்கன்னிஎதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். சகோதர வகையில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சற்று நிதானத்துடன் செயல்படவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். இறை சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். சிரமம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்துலாம்மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். சகோதரர் வகையில் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். சுபகாரியங்களில் பொறுப்புகள் மேம்படும். வியாபார பணிகளில் வேலை ஆட்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். ஊக்கம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு விருச்சிகம்மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அதிரடியான செயல்கள் மூலம் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பச்சை தனுசுகுடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். சக ஊழியர்களின் ஆதரவுகள் திருப்தியை ஏற்படுத்தும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : பச்சைமகரம்எதிலும் ஆர்வம் இன்றி செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைப்பது நல்லது. புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்கள் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். இரக்கம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கும்பம்உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும். கடினமான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களால் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்மீனம்வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பாராத வரவுகள் உண்டாகும். இனம் புரியாத கவலைகளால் சோர்வுகளும், தாமதமும் ஏற்படும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். விருந்தினர்களின் வருகையால் சுபச்செலவுகள் ஏற்படும். எதிலும் அவசரம் இன்றி நிதானமாக செயல்படவும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை
Added a post
குரோதி வருடம் மாசி மாதம் 29 ஆம் தேதி வியாழக்கிழமை 13.3.2025.சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 11.39 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.இன்று அதிகாலை 05.09 வரை மகம். பின்னர் பூரம்.உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
Added a post
என்னுடைய குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்களால் என்னுடைய சிறிய கர்வம் ஒன்று மிக அழகாக எடுத்து வெளியே போடப்பட்டது .எழுத்தாளன் என்ற கர்வத்தால் மனம் குதித்துக் கொண்டிருந்த நேரம் அது. நன்கு எழுதி பலபேர் பேரை வியக்க வைத்த காலம் அது. எதைப் பற்றி எழுதினாலும் மிகத் தெளிவாக எழுதுகிறேனே என்று கடிதங்கள் மூலமாகவும், நேராகவும் ஜனங்கள் என்னை அடையாளம் கொண்டு பாராட்டிய காலகட்டம் அது.திருவண்ணாமலைக்கு வந்து என் குருவை சந்தித்து முதல் முறை புறக்கணிக்கப்பட்டு, இரண்டாம் முறை ஆரத்தழுவப் பட்டு 3, 4 , 5 முறைகள் பேசப்பேச என்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, பல்வேறு விஷயங்களை எனக்கு பரிமாறி என் குருநாதர் வழி நடத்திக் கொண்டிருந்த காலம் அது.எழுதுகிறோம் என்ற கர்வம் எனக்கு மட்டுமல்லாது, ஒரு நல்ல குருநாதரை அடைந்து விட்டோம் என்ற கர்வமும் எனக்கு ஏற்பட்டிருந்தது. அந்த குருநாதரும் மற்றவர்களை போல என்னை வரிசையில் நிற்க வைக்காது, உடனடியாக உள்ளே கூப்பிட்டு வலது கைப்பக்கம் அவருடைய பாயிலே இடம் கொடுக்கின்ற சந்தோஷம் திமிராக எனக்குள் பரவிக் கிடந்த நேரம் அது .திருவண்ணாமலைக்கு ஒருமுறை வந்து குளித்து வேறு உடை உடுத்திக் கொண்டு, நெற்றியில் திருநீறு இட்டு, சிறிது அளவு சிற்றுண்டி சாப்பிட்டு, தங்கிய ஓட்டலில் இருந்து குரு இருக்கிற இடம் நோக்கி நடக்க போகும் வழியில் ஹோட்டல் நிலைக் கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்க எனக்கு பரவசமாக இருந்தது."அடடே நம்முடைய முகம் மாறிப் போயிற்று. நம்முடைய தேஜஸ் வந்துவிட்டது. நம்முடைய வெள்ளை சட்டையும் விபூதியும், பெரிய கண்களும் நம்முடைய முகத்தை அழகாக இருக்கின்றன. இதைத்தவிர, வேறு ஏதோ அற்புத ஒளியும் சமுகத்தில் இருக்கிறது "என்று எனக்கு நானே ரசித்துக் கொண்டு , படி இறங்க திருவண்ணாமலையிலுள்ள வாசகர்கள் ஆவலோடு சுட்டிக்காட்டி ,நீங்கதானே சார் ? என்று கேட்டார்கள் ." ஆமாம் " என்று தலையசைக்க கையெழுத்து வாங்கினார்கள் கையெழுத்து போடும்போது கர்வம் எனக்கு கொப்பளித்தது .எப்போதும் நான் குருவினுடைய வீட்டு வாசலுக்கு போனாலும் உடனே கதவு திறக்கும். என்னை கட்டிக் கொள்வதும் முதுகை தட்டிக் கொடுப்பதும் என்று பல்வேறு விதங்களில் பாராட்டுக்கள் அவரால் செய்யப்படும்.நான் போன அந்த க்ஷணம் பெரிய சப்தத்துடன் ஒரு ' ஆஸ்ட்ரே ' யாராலோ கீழே போடப்பட்டு தரை முழுவதும் சாம்பலும், சிகரெட் தூளும் சிதறிக் கிடந்தா எதிரிகள் அதனை வாய் முழுவதும் பரவிக் கிடந்தன .யோகிராம்சுரத்குமார் போட்டவரே லேசாக கண்டித்து கொண்டு அந்த சாம்பலை கையால் வேகமாக அப்புறப்படுத்தினார். கதவை திற பாலகுமாரன் வரட்டும் என்று கட்டளையிட்டார். கதவு திறக்கப்பட்டதுவழக்கம்போல் அவருக்கு அருகே பாயை விரித்து உட்கார இடம் கொடுத்தார். ஆஷ்ட்ரே திறந்து சாம்பல் கொட்டிவிட்டது என்று என்னிடம் சொன்னார். நான் பார்த்தேன் என்று தலையசைத்தேன் .உடனே சந்தோஷமாக முதுகில் ஒரு தட்டு தட்டினார் கட்டிக்கொண்டார். வெள்ளை சட்டையில் இடது பக்கமும் வலது பக்கமும் அவர் கையிலிருந்த சாம்பல்கள் ஒட்டிக்கொண்டன.'அடடே .. என்ன இது சாம்பலை உன் மீது வைத்துவிட்டேனே' என்று பதறி அந்த சாம்பலை துடைக்க முற்பட்டார். என் சட்டையை முழுவதும் இடது பக்கமும், வலது பக்கமும் கருப்பாயின .'சே.. என்ன இந்த பிச்சைக்காரன் இப்படி செய்து கொண்டிருக்கிறான் என் சட்டையை நான் பாழ்படுத்தி விட்டேனே இரு.. இரு .. என்னைக் கையமர்த்தினார் . வாசற்கதவை மறுபடி திறக்க சொன்னார். வாசலில் சிரித்துக் கொண்டிருக்கிற மக்களை ஒவ்வொருவராக உள்ளே வரச்சொன்னார். அன்றைக்கு என்று எல்லார் கையிலும் மாலை இருந்தது .ஒரு ஆள் உள்ளே நுழைந்தார். உள்ளே நுழைந்தவரிடம், " இவர் யார் தெரியுமா ? " என்று என்னைச் சுட்டிக்காட்டி கேட்டார் உள்ளே நுழைந்த ஆள் வாய் பொத்தி, " தெரியும் சாமி என்று சொன்னார்."யாரென்று சொல்ல ?"பெரிய எழுத்தாளர் சாமி உங்களைப்பற்றியெல்லாம் கூட எழுதுறார் சாமி "" அப்படியா.. இந்த மாலை யாருக்கு ? ""உங்களுக்கு சாமி ""வேண்டாம் அவருக்கு போடு" என்று என்னைக் காட்டினார்.வந்த மனிதர் ஒரு சாமந்தி மாலை என் கழுத்தில் போட்டு என் காலில் நமஸ்காரம் செய்து விட்டுப் போனார். எனக்கு இலேசாக வயிற்றில் ஒரு கலவரம் ஏற்பட்டது .வந்தவர் போக, அடுத்தவர் உள்ளே நுழைந்தார் அவரிடம் இருந்த கதம்ப மாலை , இவர்யார் தெரியுமா? என்று கேட்கப்பட்டு எனக்கு போடப்பட்டது.மூன்றாமவர் வந்தார். இது துளசி மாலை." இவர் யார் தெரியுமா ? என்று மறுபடியும் கேள்வி கேட்கப்பட்டு ஒரு எழுத்தாளர் என்று சொல்லப்பட்டு ,அந்த மாலையை என் கழுத்தில் போடப்பட்டது. ஒன்றன்பின் ஒன்றாக ரோஜா மாலை துளசிமாலை சாமந்தி மாலை என்று பலவகை என் கழுத்தில் விழுந்து ஏழு மாலைகள் என் காது வரை நிறைந்திருந்தன.அவற்றை கலைய முற்படும்போது, கூடாது என்று அவர் தடுத்து விட்டார்.எனது கழுத்திலிருந்து காதுவரை ஏழு மாலைகள் பல்வேறு வண்ணங்களில் என்மீது இருந்தன. வெயில் காலமாதலால் , உடம்பு வியர்வை சட்டையில் பட்டு ,சட்டையின் வியர்வை - மாலையில் உள்ள நூலில் பட்டு நூலிலிருந்து சாயம் போய் மஞ்சள் , நீலம் , சிகப்பு என்று வெள்ளை சட்டையில் பரவி ரேகைகள் ஆறாக ஓடிக் கொண்டிருந்தது.'நான் குளித்து சட்டையையும் பார்த்துக் கொண்டேன் .எந்த வேளையில் இந்த சட்டையை வெள்ளையாக இருக்கிறது. என் முகம் தேஜஸாக இருக்கிறது என்று நினைத்தேனோ, உடனே தன் வெள்ளை சட்டையையும், என் முகத்தையும் என் குருநாதர் மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் எனக்குத் தெரிந்துவிட்டது.ஏழு மாலைகள் வெய்யில் நேரத்தில் கழுத்து, பிடரி, பின்னந்தலை என்று எல்லாவற்றிலும் குத்திக் கொண்டிருக்க, நான் அவஸ்தையோடு உட்கார்ந்து கொண்டிருந்தேன்.' வேறு எவரேனும் மாலை போட இருக்கிறார்களா ' என்று குரு கேட்க நல்லவேளை யாருமில்லை " சரி கிளம்புவோம்" என்று எழுந்தார் .நான் மிக சந்தோஷத்தோடு மாலையை கழற்ற முற்பட்டபோது, "இல்லை இல்லை இந்த மாலைகளை நீ கழற்றக்கூடாது என்று சொல்லி கையை பிடித்து வெளியே அழைத்து வந்தார் .என்னுடைய வலது கையில் அவருடைய விசிறியைக் கொடுத்தார். கொட்டாங்குச்சியை கொடுத்தார். இடது கையில் தன்னுடைய கோலைக் கொடுத்தார். உயரே தூக்கிப் பிடித்துக் கொள்ளச் சொன்னார் . உயரே இருந்த என் இடது கையை அவரும் பிடித்துக்கொண்டார் . தன் வீட்டு வாசலைப் பூட்டிக்கொண்டு, சாவியைப் பையில் போட்டுக் கொண்டு என் கையை பிடித்தபடி திருவண்ணாமலையை சுற்றி நடத்தத் துவங்கினார் .கழுத்தில் ஏழு மாலைகள் வலது கையில் பனை விசிறி , கொட்டாங்குச்சி ,இடது கையில் கம்பு .கம்பைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற குருநாதர் யோகி ராம்சுரத்குமார் இடுப்பில் வழவழப்பான உயர் ரகமான வேட்டி. எனக்கு இப்படி கோமாளியாக இருப்பதில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இடுப்பு வேட்டி 'எப்போது வேண்டுமானாலும் அவிழ்ந்துக் கீழே விழுவேன் 'என்று என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. எனக்கு அதைப் பற்றியே அதிகக் கவலையாயிருந்தது.திருவண்ணாமலையில் யாருக்கெல்லாம் கையெழுத்துப் போட்டேனோ . எவரெல்லாம் என்னை பார்த்து கைகூப்பினார்ககளோ அவர்களெல்லாம் மீண்டும் என்னை பார்க்கும்படி ஊர்வலமாக அழைத்து கொண்டு போனார்.அவர்கள் தொலைவிலிருந்து என்னைப் பார்த்து கைநீட்டி மறுபடியும் பேசினார்கள். முன்பு அவர்கள் பேசியபோது பாராட்டுவது போல் தெரிந்தது .இப்போது அவர்கள் கை நீட்டி பேசுவது கேலி செய்வது போல் தோன்றியது." கடவுளை நான் இனிமேல் திருவண்ணாமலைக்கு வந்து பெரிய எழுத்தாளன் என்று அலட்டிக்கொள்ள மாட்டேன். தயவு செய்து என் இடுப்பு வேட்டியை அடுத்து விடாதீர்கள் என்று மனதுக்குள் கெஞ்சினேன் . மாலையோடு போனாலும் பரவாயில்லை, விசிறியோடு போனாலும் பரவாயில்லை, இரண்டு கைகளையும் உயரே தூக்கிக்கொண்டு உடம்பெல்லாம் சாயம் வழியே நடந்தாலும் பரவாயில்லை, இடுப்பு வேட்டி இல்லாமல் ஒருவன் எப்படி நடந்து போவது வெறும் சட்டையும் ஜட்டியுமா ஒரு எழுத்தாளன் எப்படி திருவண்ணாமலை தெருவில் நடந்து போவது மனம் தவியாய் தவித்தது.மறுபடி மறுபடி குருநாதரை வேண்டிக்கொண்டேன் நல்லவேளை திருவண்ணாமலை சுற்றி அவர் இடத்திற்கு வரும் வரை வேட்டி அவிழவே இல்லை அவர் இடத்திற்கு வந்து அவரை நமஸ்கரித்து நிமிர்ந்தபோது சரக்கென்று வேட்டி சரிந்தது. என் கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டேன். எனக்கு புரிந்தது பகவான் என்று கைகூப்பினேன் .' இட்ஸ் ஆல் ஓவர் , என்று பகவான் என்னை கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்.அன்று முதல் இன்று வரை குரு என்றால் எவ்வளவு அடக்கமாக இருக்க வேண்டும். எத்தனை அமைதியாக இருக்க வேண்டும். எவ்வளவு உண்மையாக இருக்க வேண்டும். என்று தெள்ளத் தெளிவா தெரிந்தது போயிற்று. இந்த நிலையிலிருந்து இன்று வரை நான் நெல்முனையளவும் மாறவில்லை .இப்பொழுதும் திருவண்ணாமலை என்று சொன்னாலே மனம் கைகூப்பும், குருவின் பெயரைச் சொன்னாலே சாஷ்டாங்கமாய் உள்ளுக்குள் ஒரு நமஸ்காரம் ஏற்படும் .குரு என்பது பயமுறுத்தல் அல்ல. குரு என்பது ஒரு அன்பின் பிணைப்பு, உரிமைச், சங்கிலி நம் குறையை கலைந்து எடுத்து வெளியே போடும் ஞானக்தந்தை. அன்பு ஆசான் , உற்ற சினேகிதன், இளைப்பாற விசிறி விடும் தாய். அடிமனதில் இருந்து குரல் கொடுத்தால் போதும் எல்லா வேதனையிலிருந்தும் மீட்க ஓடி வரும் தெய்வம் .-குரு வழி - பாலகுமாரன்