நான் ஒரு வேலை இல்லா பட்டதாரி ! நல்ல வேலை தேடி கொண்டு இருக்கேன்!
நேற்று ஒரு ரெஸ்டாரண்டில் வேலை காலியாக இருக்கு என்று சொன்னார்கள் அதனால் அங்கு போய் இருந்தேன்!
மரியாதை நிமித்தம் என்னை அமர வைத்து குடிக்க காபி கொடுத்தார்கள்! நான் குடித்து கொண்டு இருக்கும்போது! எனக்கு ரெண்டு டேபிளுக்கு அருகில் ஒரு வசதியான நபர் ஒருவர் அமர்ந்து உணவு அருந்தி கொண்டு இருந்தார்!
அப்பொழுது அங்கு வேலை செய்து கொண்டு இருக்கும் ஒரு வெயிட்டர் அவரின் காலில் விழுந்து ஐயா என் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை ஆபரேசன் செய்யணும் என்று சொல்ல உடனே அவர் தன் உதவியாளரை கூப்பிட்டு அவனுக்கு தேவையான பணத்தை கொடுத்தார்!
சற்று நேரத்தில் உணவகத்தை சுத்தம் செய்யும் பெண்மணி ஐயா என் மகளுக்கு படிப்பு செலவுக்கு பணம் தேவை படுகிறது என்று சொல்ல ! அவரும் உடனே பணம் எடுத்து கொடுத்தார்!
கொஞ்ச நேரம் ஆகி இருக்கும் அந்த உணவகத்தின் வாட்ச் மேன் வந்து ஐயா ! நான் இன்றுடன் நான் ரிடயர்டு ஆகிறேன்! அடுத்த மாதத்தில் இருந்து குடும்ப செலவுக்கு என்ன செய்வேன் என்று தெரியவில்லை என்று சொல்ல உடனே உதவியாளரை கூப்பிட்டு தேவையான பணத்தை கொடுத்து அனுப்பினார்.
இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த நான் பொய் சொல்ல தயாரானேன்!
பார்த்தேன் இப்ப யாரும் அவர் அருகில் இல்லை!
டக் என்று அவர் அருகில் சென்று அவர் காலில் விழுந்து ஐயா நான் ரொம்ப ஏழை! சாப்பாட்டிற்கு வழியில்லை! பெரிய குடும்பம்! குடிகார தந்தை, நோயால் வாடும் அம்மா! ஊனமுற்ற தந்தை காப்பாற்றுங்கள் ஐயா என்று அவர் காலை பிடித்து சத்தமாக கெஞ்ச ஆரம்பித்தேன்.
அவ்வளவு தான் !
கட் ! கட் ! யாருப்பா அது நடுவில்! என்று ஒரு சத்தம்!
திரும்பி பார்த்தால்
டீவி சீரியல் படப்பிடிப்பு!
நான் அசட்டு சிரிப்பு சிரிக்க!
ஒருவன் சொன்னா காசு கொடுக்காமலே எப்படி கூவுறான் என்று!
- 577