Feed Item
·
Added a post

இக்கரைக்கு அக்கரை பச்சை....

இது ஒரு அருமையான சொல்லாடல் முதுமொழி,அல்லது பழமொழி பசுமையும் ,பனி மேகங்களும், கானலும் ,நாம் இருக்கும் இடத்தில் தெரியாது.... இங்கிருந்து பார்த்தால் அங்கிருப்பது போலவும் அங்கிருந்து பார்த்தால் இங்கிருப்பது போலவும் தோன்றும்

காய்ந்த மாடு கம்பிலே விழுந்தாற்போல....

பழங்காலத்தில் தமிழர்கள் நெல்லை மட்டும் விதைக்கவில்லை. நெல்லை தவிர கம்பு, வரகு, சாமை போன்ற பலவகையான தானியங்களைப் பயிர் செய்தார்கள். நெல்லு விதைத்த இடத்தை வயல் என்பது போல், கம்பு என்ற தானியம் பயிர் செய்த இடத்தைக் கொல்லை என்பார்களாம். இவ்வளவுக்கும் கம்பு அவ்வளவு சுவையானதுமில்லை, அதை விட நெல்லை விட மலிவானதும், இலகுவாகப் பயிர் செய்யப்படக் கூடியதுமாகும். பசியால் வாடிக்காய்ந்த மாடு எப்படிக் கம்பிலே விழுந்ததோ, அதாவது விழுந்து, விழுந்து சாப்பிட்டது போல, காணாததைக் கண்டவன் போல, யாராவது அவசரப்பட்டால், அல்லது ஆசைப் பட்டால் அல்லது யாராவது சுமாரான அழகுள்ள பெண்ணின் பின்னால் அலைந்தாலும் கூட இந்தப் பழமொழியைக் கூறுவார்கள்

கள்ளன் பெரியதா காப்பான் மரபெரியதா…?

வண்டு துளைத்த பழம் இனிப்பாக இருக்குமென்று சொல்லுவர் ஆனால் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று மாட்டிக் கொள்ளும் வண்டு ஒரு கள்ளன் ,அந்தக் கனியின் சுவையைக் கூட அறிய முடியாமல் , சுவைக்க முடியாமல் மாங்கொட்டையின் உள்ளே மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறது பூ மூடிக் கொண்டு காயாகி பின் கனியாகி அதையாராவது உண்ணும்போதுதான் வெளியே வரமுடியும் அதனால் கள்ளனாய் இருப்பதை விட காப்பனாய் இருப்பதே மேல்

ஊரோடு_ஒத்து_வாழ்

ஊரோது ஒத்து வாழ் என்றால், நீ எந்த ஊரில் இருந்தாலும், அது சொந்த ஊராக இருந்தாலும் சரி, வேறு ஊராக இருந்தாலும் சரி . அக்கம் பக்கம் உள்ளவர்களிம் அன்புடனும் ஆதரவுடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்பதே இத‌ன் உ‌ண்மையான பொருளாகும். இதையே ஔவையார் ஊருட‌ன் பகைக்கின் வேறுட‌ன் கெடும் எ‌ன்று கூறியுள்ளார்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

ஒருவர் பிறருடன் ஒற்றுமையாக இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம். ஏனெனில் அவருக்குப் பிறர் உதவி எப்போதும் கிடைக்கும். மற்றவர்களிடம் ஒற்றுமையில்லாதவருக்கு யாரும் உதவ மாட்டார்கள்.

நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்

அதாவது, நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழியை நாம் நகைச்சுவைக்காகஅல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.இது தவறு, ஓர் அரண்மனை வாயிலில் நாயைக் கட்டி வைக்க வேண்டும் என்று மன்னன் விரும்பினான். அது கொஞ்சம் சிரமம் என்பதால்அதற்கு மாறாக நாயை தத்ரூபமாக கல்லில் செதுக்கி அரண்மணை வாயிலில் அமைத்தனர்.அதனை சற்றுத் தொலைவில் இருந்து கண்டுற்ற பொது ஜனம் ஒருவர், அதை உயிரோடு இருக்கும் நாய்தான் என்று எண்ணினார். ஒரு சிலநாட்கள் கழித்து அதனை பார்த்த அவர், ஒரு நாய் எவ்வாறு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் என்ற சந்தேகத்தில் அருகேச் சென்றுப் பார்த்தார்.அப்போதுதான் அது நாய் அல்ல கற்சிலை என்பது விளங்கிற்று. அப்போது அந்த நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் கல்லாகக் கண்டபின் அங்குநாய் இல்லை. நாயாக காணும்போது அங்கு கல் தெரியவில்லை என்று கூறினர். அதாவது நாம் ஒரு விஷயத்தை எவ்வாறு பார்க்கிறோமோ அது அவ்வாறு தான் நமது கண்களுக்குப் புலப்படுகிறது என்பதை உணர்த்துவதேஇந்த பழமொழி.

அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்

இதனை நாம் மற்றவர்களை அடிக்கும் போதோ அல்லது அடி வாங்கும்போதோ எத்தனை முறை காதில் கேட்டிருக்கிறோம். இது தவறுஅதாவது பழமொழியின் உண்மையான பொருள்... ஆண்டவனின் திருவடி நிழல் உதவுவது போல அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள்என்பதுதான். ஆண்டவனின் திருவடியைத்தான் அடி என்றார்களேத் தவிர, மற்றவர்களை துன்புறுத்தும் விதத்தில் நாம் அடிப்பதை அல்ல.

முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று.....

யாராவது போலியாக அழும்போது முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள். அதாவதுஅறிவியல் பூர்வமாக முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதனால் இந்த அழுகை போலியானது என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறுசொல்லப்படுகிறது.ஆனால் அதற்கான பொருள் அதுவல்ல, முதலை இழந்தவன் வடிக்கிற கண்ணீர் போல என்பதுதான் நாளடைவில் திரிந்து முதலைக் கண்ணீர்என்றாகிவிட்டது. அதாவது தொழிலில் முதல் போட்டு செய்தவன் இழப்பு ஏற்பட்டால் கண்ணீர் வடிப்பதைப் போன்றது என்பதை கூறவே இந்தபழமொழி உண்டானது.

வெளுத்ததெல்லாம் பாலல்ல......

நல்லவர்கள் போல் வெளியே பேசப்படுபவர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்ல.

  • 699