பிக்பாஸ் வீட்டில் அமீர் தான் சிறு வயதில் பட்ட துயரங்களையும், கஷ்டங்களையும் மற்ற போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். போட்டியாளர்கள் உட்பட பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
அமீருக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அமீர் தன் தாயை இழந்த பிறகு மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி சொந்தமாக ஒரு டான்ஸ் ஸ்டுடியோவை ஆரம்பித்துள்ளார்.
நடன வகுப்பில் முதலாவதாக சேர்ந்த குழந்தை அலைனா. அலைனா தான் தன்னுடைய வாழ்க்கையை திருப்பி போட்ட குழந்தை என்று அவர் கூறினார். மேலும் தனியாக வாழ்ந்து வந்த தன்னை அந்த குழந்தையின் அப்பா அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று மிகவும் நன்றாக பார்த்து கொண்டதாக தெரிவித்தார.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த எபிசோடுக்கு பிறகு அமீருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது. அமீரை தன் சொந்தமாக பார்த்துக் கொண்ட அந்த குடும்பத்தினருக்கும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி வந்த அமீர், பாவ்னியை நம்ப வேண்டாம் என்று ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறுகின்றனர். தனக்கு ஒரு பிரச்சனை என்றால் பாவ்னி யாரையும் மாட்டிவிட தயங்க மாட்டார் என்றும், அபிநய்க்கு வந்த நிலைமை உங்களுக்கு வந்து விடக்கூடாது என்றும் கூறுகின்றனர்.
அமீர் தன்னுடைய அம்மா கணவன் இல்லாமல் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை சிறு வயதிலிருந்தே பார்த்த காரணத்தால் தான் கணவரை இழந்த பாவ்னியின் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு வந்திருக்கிறது. இது ஒருபுறம் பாராட்ட வேண்டிய விஷயம் என்றாலும். அமீரின் இந்த நேசத்திற்கு பாவ்னி ஏற்றவர் இல்லை.
பிக்பாஸ் வீட்டில் நிறைய முறை அவர் தன்னை நம்பும் பலரை சிக்கலில் மாட்டி உள்ள நிகழ்வுகளை நாம் பார்த்துள்ளோம். இதை ஒரு முறை ராஜு அனைவரின் முன்பும் கூறியிருக்கிறார். அப்படியிருக்க அமீர், பாவ்னியை இந்த அளவு நேசிப்பது வேண்டாம் என்று பலரும் அவரை எச்சரிக்கின்றனர்.
- 1374