கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்கள் சிறுவர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகளவில் காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.கிளிநொச்சி மாவட்டத்தில் அன்மைய நாட்களாக குடும்ப வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறுவர் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் என்பன அதிகரித்துக் காணப்படுகின்றதுஅதாவது நாட்டில் ஏற்பட்டுள்ள கொறோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில் வாய்ப்பின்மையால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது போதைப் பொருள் பாவனை சட்டவிரோத கசிப்பு உற்பத்தி என்பவற்றால் கிராமப்புறங்களில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுகின்றனபெண்கள் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் அதிகரிப்பால் பெண்கள் குடும்ப வன்முறைகளால் சிறுவர்கள் பெண்கள் மீதான சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.குறிப்பாக குடும்பப் பெண்கள் தாக்கப்படுதல் சிறுவர்கள் குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல் மூலம் அறிய முடிகின்றது. தற்போது பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்ட விரோத சட்ட ரீதியற்ற தொழிலுக்கு குறைந்த வேதங்களுடன் சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் குறிப்பாக சட்டவிரோத மண் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்ற பிரதேசங்களிலேயே அதிகமான சிறுவர்கள் சட்டவிரோத மணல் அகழ்வில் குறைந்த வேதனத்துடன் பயன்படுத்த படுவதுடன் அவர்களை போதை பொருள் பழக்கத்துக்கு உள்ளாகும் நிலமையும் காணப்படுகிறது.
- 2241