Feed Item
Added a news 

 

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா நேற்று(22) இந்தியா சென்றுள்ளார்.

இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கலந்துரையாடலில் இரண்டு நாடுகளினதும் உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், நீர்வளம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பங்களாதேஷில் இருந்து சிகிச்சைகளுக்காக இந்தியா செல்வோருக்கு எளிதில் விசா வழங்குவதற்கான ஈ-விசா முறைமையை நடைமுறைப்படுத்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பங்களாதேஷின் வடமேற்கு பகுதி மக்களின் நன்மைகருதி ரங்க்பூர் பகுதியில் புதிய இந்திய தூதரகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

00

  • 363