Feed Item
Added a news 

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி களப்பில் கடத்து தோணி நேற்று (23) கவிழ்ந்து விபத்திற்குள்ளானமை துரதிஷ்டவசமான சம்பவம் என பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஸா தெரிவித்தார்.இந்த சம்பவத்திற்கு முன்னர் தற்காலிகமாக படகு சேவையை மேற்கொள்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. அமைச்சரவை இதற்கு அனுமதி வழங்கவில்லை எனவும் நிமல் லன்ஸா குறிப்பிட்டார்.பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (24) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிடடார்.இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.கிண்ணியா நகர சபையின் தவிசாளர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த படகு பயணத்திற்கு அனுமதி வழங்கியிருக்கின்றார். இவ்வாறான ஒரு பின்னணியிலேயே பொதுமக்களுக்கு தமது உயிர்களை விலையாக கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம் எனவும் நிமல் லன்ஸா கோரிக்கை விடுத்தார்.

  • 532