நட்ஸ் பால்ஸ்
- சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் (Healthy Snacks) உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்து மற்றும் ஆற்றலை வழங்குகின்றன.
Ingredients
தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்,
வறுத்த எள் - 2 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை - அரை கப்,
ரஸ்க் - 6,
பொடித்த வெல்லம் - 150 கிராம்,
பேரீச்சை - 6,
முந்திரி - 8, உலர்திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி,
நெய் - சிறிதளவு.
Directions
செய்முறை:
- பேரீச்சையை பொடியாக நறுக்கவும். முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கவும்.
- வறுத்த வேர்க்கடலை, வறுத்த எள், பொட்டுக்கடலை, ரஸ்க் ஆகியவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்.
- அதனுடன் வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
- இந்தக் கலவையுடன் பேரீச்சை, முந்திரி, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து கலந்து, உருண்டை களாகப் பிடித்து பரிமாறவும்.