-
- 3 friends
இன்றைய ராசி பலன் – அக்டோபர் மாதம் 1, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, புரட்டாசி மாதம் 15 ஆம் தேதி
மேஷம் -ராசி:
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் மாற்றமான அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். அரசு காரியங்களில் விவேகத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
ரிஷபம் ராசி:
திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தொழில் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்கள் செய்வது குறித்த சிந்தனைகள் மேம்படும். பயணங்களால் அலைச்சலும், அறிமுகமும் ஏற்படும். இலக்கியப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிதுனம் -ராசி:
வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கால்நடை தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நம்பிக்கை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம் -ராசி:
மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். சில விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய் வழியில் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம் -ராசி:
சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பேச்சுத் திறமையால் லாபம் அதிகரிக்கும். பொன், பொருட்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். விளையாட்டுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
கன்னி -ராசி:
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். திடீர் பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். புதுமையான செயல்களில் ஆர்வம் உண்டாகும். மற்றவர்கள் மீதான கருத்துகளில் கவனம் வேண்டும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு
துலாம் -ராசி:
வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். மூத்த உடன்பிறப்புகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
விருச்சிகம்- ராசி:
மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழில் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆன்மிகப் பணிகளில் புரிதல் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
தனுசு -ராசி:
அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மகரம் -ராசி:
பலதரப்பட்ட மக்களின் தொடர்பு ஏற்படும். திறமைக்கு உண்டான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம் –ராசி:
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் கனிவு வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நேரம் தவறி உணவு உண்பதை குறைத்துக் கொள்ளவும். எதிலும் பதற்றம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
மீனம் -ராசி:
சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சக மாணவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழகும் விதங்களில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·