-
- 3 friends
இன்றைய ராசி பலன் – ஆகஸ்ட் மாதம் 1, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆடி மாதம் 16 ஆம் தேதி
மேஷம் -ராசி:
பிற மொழி பேசும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். சூழ்நிலைக்கேற்ப பேசி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பலதரப்பட்ட விஷயங்களால் மனதில் அமைதியின்மை உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
ரிஷபம் ராசி:
நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சொத்துக்கள் விற்பது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் அலைச்சல் அதிகரிக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
மிதுனம் -ராசி:
கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். தடைபட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கடகம் -ராசி:
உறவினர்களின் உண்மை நிலைகளை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் சுதந்திர போக்கு மேம்படும். எதிர்பாராத சில விரயங்கள் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கவலை குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம் -ராசி:
எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். இணைய துறைகளில் மாற்றம் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். மறுமணம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி -ராசி:
ஒப்பனை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிற மொழி சார்ந்த மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம் -ராசி:
தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். அனைவரிடத்திலும் அனுசரித்துச் செல்வதன் மூலம் மன அமைதி ஏற்படும். எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். விவசாயப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். கடன் உதவிகள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்- ராசி:
உடனிருப்பவர்கள் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். எளிமையான பணிகளில் தாமதம் ஏற்படும். கலை பொருட்களில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். குழந்தைகளிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
தனுசு -ராசி:
உடனிருப்பவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனை சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
மகரம் -ராசி:
விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். இடம்பெயர்வது சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். குறுகிய பயணத்தால் புதிய வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வாரிசுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம் –ராசி:
கலகலப்பான பேச்சுக்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்துவீர்கள். வரவுகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். எதிலும் உணர்வுபூர்வமாக செயல்படுவீர்கள். இலக்கியப் பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம் -ராசி:
மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் மறையும். உடனிருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·