1700 கிலோ எடைகொண்ட வாகனத்தை தாடியில் கயிறு கட்டி இழுத்த இலங்கை முதியவர் - சோழன் சாதனை புத்தகத்திலும் பதிவு
தமிழ்நாடு சிங்கம்புணரியில் 1700 கிலோ எடை உள்ள சரக்கு வாகனத்தை இலங்கை முதியவர் தனது தாடியால் கயிறு கட்டி 15 நிமிடங்களில் 510 மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 60 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சுமார் 1700 கிலோ எடை உள்ள சரக்கு வாகனத்தை இவர் தனது தாடியில் கயிறு கட்டி அந்த வாகனத்தை பதினைந்து நிமிடங்களில் 510 மீட்டர் தூரத்திற்கு இழுத்தச் சென்று குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளதுடன் அவரது சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்திலும் பதியப்பட்டது
இந்நிலையில் குறித்த சாதனையை பாராட்டி அவருக்கு பதக்கம் பாராட்டு சான்றும் ஏற்பாட்டக் குழுவினரால் வழங்கப்பட்டது
முன்பதாக செல்லையா திருச்செல்வம் என்பவர் ஏற்கனவே இலங்கையில் வாகனத்தை தாடிகள் கட்டி இழுத்து சாதனை செய்திருந்ததுடன் அந்த சாதனையும் சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் குறித்த சாதனையை நிகழ்த்திய செல்லையா திருச்செல்வம் நாளையதினம் (13.06.2024) இலங்கை தமிழகத்திலிருந்து பலாலி சர்வதேச விமான நிலையமூடாக இலங்கை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000