Ads
கனடாவில் அதிகரித்துவரும் நோய்தொற்று - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கனடாவில் குரங்கம்மை நோய் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதாக கனடிய ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கம்மை நோய் தொற்று தொடர்பில் பரிசோதனைகளை நடத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டில் மொத்தமாகவே 33 குரங்கம்மை நோயாளர்களே மாகாணத்தில் பதிவாகியிருந்தன. கடந்த ஜனவரி முதல் மாகாணத்தில் 26 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
குரங்கம்மை தொற்றாளர்கள் அதிகளவு பதிவான பகுதியாக ரொறன்ரோ (Toronto) காணப்படுவதோடு, அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 77 வீதமான நோயாளர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்தவர்கள்.
Info
Ads
Latest News
Ads