Ads
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பேஸ்புக் பக்கம் மீது சைபர் தாக்குதல்
வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்று( 26) மாலை முதல் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சைபர் தாக்குதலின் பின்னர் ஹேக்கர்களால் அமைச்சரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இணைய விளையாட்டுக்கள் உட்பட பல்வேறு வகையான வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சைபர் தாக்குதல் தொடர்பில் அமைச்சர் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
Info
Ads
Latest News
Ads