Ads
உக்ரைனில் இருந்து நுழைய முயன்ற 5 பேரை சுட்டுக்கொன்றது ரஷிய ராணுவம்
ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. விரைவில் ரஷியா போர் தொடுக்கும் என அமெரிக்கா கூறி வருகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் எல்லையில் போர் பயிற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தங்கள் எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது ஏற்பட்ட மோதலில் 5 பேரை சுட்டுக் கொன்றதாகவும், ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள மித்யகின்ஸ்காயா கிராமத்திற்கு அருகே காலை 6:00 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும் ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் எல்லை முழுவதும் பதற்றம் அதிகரித்தது.
Info
Ads
Latest News
Ads