மரத்தை திருமணம் செய்துகொண்ட பெண்
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் மெர்சிசைடில் இருக்கும் செப்ஃடனில் எல்டர் என்கிற மரத்தினை 37 வயது பெண் கேட் கன்னிங்காம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் திருமணம் செய்திருக்கிறார். திருமணம் முடிந்த கையோடு அவரது பெயருடன் எல்டர் என்கிற பெயரை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
அந்தப்பெண் வாரத்திற்கு 5 முறையாவது அந்த மரத்தினை சென்று பார்த்துவிட்டு செல்வதாக கூறியிருக்கிறார் . பாக்கிங் டே எனப்படும் தினத்தன்று மரத்தோடு நேரத்தை செலவழிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று என்று சொல்கிறார். அந்த மரம் தன்னை மகிழ்ச்சியில் நிறைவு செய்வதாகவும் இந்த வாழ்க்கை சிறப்பாக மாறியுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த மரத்தினை அலங்கரித்து அழகு படுத்தி இருக்கிறார். கன்னிங்காம் ஒரு இயற்கை அலுவலர். ரிம்தோஸ் பள்ளதாக்கு கண்ட்ரி பார்க் வழியாக புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த மரத்தை திருமணம் செய்ததாக அவர் அறிவித்தார். இதற்கு முன்பு மரத்தை திருமணம் செய்த மெக்சிகன் பெண்களால் மிக்சிகன் பெண்கள் அளிக்கப்பட்டது காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருக்கிறார்.