·   ·  8243 news
  •  ·  5 friends
  • I

    9 followers

டிரம்பின் சொந்த பணத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ்க்கு சம்பளம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கி தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய 2 பேரும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த 19 திகதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி டிரம்பிடம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளியில் கூடுதல் காலம் தங்கியிருந்ததற்காக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

"இதை யாரும் என்னிடம் குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால், நான் அதை எனது சொந்த பணத்தில் இருந்து கொடுப்பேன்" என கூறியுள்ளார். மேலும் அவர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்ததற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே விண்வெளியில் கூடுதல் காலம் இருந்ததற்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு நாள் ஒன்று 5 டொலர்கள் சிறப்பு சம்பளமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதாவது அவர்களின் ஆண்டு வருமானமான 1,52,258 டொலர்களுடன் கூடுதலாக 1,430 டொலர்கள் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது..

  • 671
  • More
Comments (0)
Login or Join to comment.