·   ·  8247 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பிசினஸ் கிளாஸ் சேவையை அறிமுகம் செய்த இண்டிகோ நிறுவனம்

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, பிசினஸ் கிளாஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

தினமும் 2200 விமானங்களை இயக்கி வரும் இண்டிகோ நிறுவனம், 18வது ஆண்டு விழாவை கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டாடியது.

பயணிகளின் நலனுக்காக புதிய அறிவிப்புகளை இண்டிகோ அறிவித்து வருகிறது. தற்போது பிசினஸ் கிளாஸ் உடன் கூடிய இண்டிகோவின் முதல் விமானம் இன்று டெல்லியில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு கிளம்பியது.

இந்த விமானத்தில் பயணம் செய்த இண்டிகோ நிறுவனத்தின் சிஇஓ, பிசினஸ் கிளாஸ் அனுபவம் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

டெல்லியில் இருந்து மும்பைக்கு பிசினஸ் கிளாஸில் பயணம் செய்ய ரூ.18,018 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • 799
  • More
Comments (0)
Login or Join to comment.