Category:
Created:
Updated:
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி நேருக்கு நேர் மோதும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
மும்பை தாராவில் தமிழக மக்கள் அதிகமாக வசிக்கும் காரணத்தினால், அங்கு பிரச்சாரம் முக்கியத்துவம் பெற்றது., தமிழக எம்பிக்கள் விஜய் வசந்த் மற்றும் திருமாவளவன் இருவரும் இணைந்து மும்பையில் தாராவியில் பிரச்சாரம் செய்தனர்.
இந்தியா கூட்டணியின் வேட்பாளர் ஜோதி கெய்க்வாட் அவர்களுக்கு ஆதரவாக இருவரும் பிரச்சாரம் செய்தனர்.