நேருவின் பிறந்தநாளையொட்டி அவரது சமாதியில் பிரியங்கா அஞ்சலி
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று (நவ.14) நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் எதிர்காலத்தைக் கற்பனை செய்து, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்திற்கான தனது இடைவிடாத முயற்சியின் மூலம் அதனை வடிவமைத்தார்.
நவீன மற்றும் தன்னம்பிக்கை மிக்க இந்தியாவிற்கு அவர் அடித்தளம் அமைத்தார். புதிய உச்சங்களை அடைய நாட்டு மக்களுக்கு அவர் சிறகுகளை வழங்கினார்.
தோட்டத்தின் மொட்டுகள் போல, குழந்தைகள் கவனமாகவும் அன்பாகவும் வளர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் மற்றும் நாளைய குடிமக்கள். நம் நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடமே உள்ளது.
நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், “நவீன இந்தியாவின் தந்தை, நிறுவனங்களை உருவாக்கியவர், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளில் மரியாதைக்குரிய அஞ்சலி.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி அவரது சமாதிக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவை பூஜ்ஜியத்தில் இருந்து உச்சத்திற்கு கொண்டு சென்றவர். வேற்றுமையில் ஒற்றுமை என்ற செய்தியை நாட்டிற்கு தொடர்ந்து வழங்கியவர். நேருவின் 135வது பிறந்தநாளில், நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவுகூருகிறோம்.