Category:
Created:
Updated:
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மதுரையில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தனது அபாரமான எழுத்தாற்றல் மூலமாக தமிழுலகை ஆண்டு வந்த இந்திரா சௌந்திர்ராஜனின் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாக அமைந்துள்ளது.
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் சேலத்தினை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது இயற்பெயர் சௌந்தர்ராஜன். மதுரையில் உள்ள டிவிஎஸ் நகர்ப் பகுதியில் வசித்து வந்தார். டிவிஎஸ் நிறுவனத்தில் துணைப் பொறியாளராகப் பணியாற்றியவர். எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது தாயின் பெயரான இந்திரா எனும் பெயரை தனது பெயருடன் இணைத்து இந்திரா சௌந்தர்ராஜன் எனும் பெயரில் கதைகளை எழுதியவர்.