·   ·  8247 news
  •  ·  5 friends
  • I

    9 followers

முதல்வருக்கு வாங்கிய சமோசா மாயம்

இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் சிஐடி தலைமையகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தகவல் மையத்தை அவர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு வழங்குவதற்காக சமோசாக்கள் மற்றும் கேக்குகள் வாங்கப்பட்டன. ஆனால் அவை திடீரென காணாமல் போனதாகவும், முதல்வரின் பாதுகாப்புக்காக வந்த அதிகாரிகள் அவற்றை சாப்பிட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வருக்காக வாங்கப்பட்ட சமோசா எப்படி காணாமல் போனது என்பதை கண்டுபிடிக்க சிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

  • 988
  • More
Comments (0)
Login or Join to comment.