வெளியானத 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும்.
அதேநேரம், onlineexams.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக, சகல அதிபர்களுக்கும், தமக்கான பயநர் பெயரைப் பயன்படுத்தி பாடசாலைகளின் பெறுபேறு அட்டவணையை தரவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்பரீட்சைக்காக பாடசாலை ரீதியில் 3,87,648 பரீட்சார்த்திகளும், தனிப்பட்ட ரீதியில் 65,331 பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தனர்.
இதேவேளை, தற்போது வெளியாகியுள்ள பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
000