·   ·  3049 news
  •  ·  1 friends
  • 2 followers

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அழைப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அப்பதவியை ஏற்குமாறு அவரிடம் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான விருப்பத்தை இதுவரை தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட்ட விதத்தை அவதானித்த பின்னரே, குறித்த பதவிக்கு முன்னாள் ஜனாதிபதியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.

மேலும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த செயற்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் உலகிற்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் ஆசிய வங்கி குறிப்பிட்டுள்ளது.

  • 2311
  • More
Comments (0)
Login or Join to comment.