Ads
துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் - ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்து
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைக்குத் தீர்வு காணும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
இப் புதிய சட்டப்படி, பாடசாலைகளில் மாணவர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மேம்படுத்தப்படும் எனவும், சட்டவிரோதமான துப்பாக்கிகள், ஸ்கேனர்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத 3-டி முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கண்டறிந்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களின் விற்பனையையும், கண்மூடித்தனமான பயன்பாட்டையும் கண்காணிக்க அதிரடிப் படை அமைக்கப்படும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads